தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.5.11

இது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி!! குஸ்புவின் ஆணவ பேச்சு!!

 தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கு தான் என்று நடிகை குஷ்பு கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக அபார கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் நடிகை குஷ்பு கடும் சினம் கொண்டார்.

கலைஞரை பார்த்து, துக்கம் விசாரிக்க மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், நடிகை குஷ்பூ ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,

இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று கூறினார்.



 கருணாநிதி ஜெயித்தால் மக்களுக்கு வெற்றி, கருணாநிதி தோற்றால் மக்களுக்கு தோல்வியா? என்னங்கடா உங்கள் நியாயம்.

தோல்வியை சகித்து கொள்ள முடியாத குஷ்பு மக்களை வசை பாடுகிறார். இவர்கள் பணத்தை காட்டி, இலவசங்களை அறிவித்து மக்களை முட்டாளாக்க நினைத்தார்கள் அது பலிக்கவில்லை.

தோல்வியை தாங்கி கொள்ள முடியாத கருணாநிதி மக்கள் எனக்கு ஓய்வு அளித்துள்ளார்கள் என்று வசனம் பேசினார். இது மாதிரி மனோகரா வசனம் எல்லாம் இப்போது மக்களிடம் எடுபாடாது என்றதும் தன் கைதடி குஷ்புவை இறக்கி விட்டுள்ளார்.

இந்த திமிர் பிடித்த குஷ்பு இது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் தலைவரும் சொல்லாத ஒரு கருத்தை சொல்லி உள்ளார். கருணாநிதி நல்ல ஒரு அரசியல் தலைவராக இருந்தால் நான் மக்கள் தீர்ப்புக்கு கட்டுபடுகிறேன் சொல்லி இருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்து விட்டார்கள் என்று சொல்வது, கைதடி குஷ்பை வைத்து மக்கள் தோற்று விட்டார்கள் என்று சொல்லவது இதுவல்லாம் ஒரு நாகரிகம் இல்லாத செயல். தமிழக பெண்களின் கற்ப்பை பற்றி பேசி சர்ச்சைகுள்ளான குஷ்பு, இப்பொது தமிழக மக்களையும் பற்றி கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

0 கருத்துகள்: