தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.5.11

மேற்கு வங்கம் இடது சாரிக்கூட்டணியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!!

 கொல்கத்தா: மேற்கு வங்காள மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 59 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றி சதவீதம் 20 ஆகும். ஆனால், மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம் மக்கள் தொகையை விட இது குறைவாகும்.

கடந்த சட்டப் பேரவையில் 46 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் இடம் பெற்றிருந்தனர். அவ்வகையில் தற்போதைய சட்டப் பேரவையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனலாம்.



மாநிலத்தின் மொத்த எம்.எல்.ஏக்கள் 294 பேர். இவர்களில் 59 பேர் முஸ்லிம்கள். வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களில் 7 பேர் முஸ்லிம் பெண்களாவர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 2 முஸ்லிம் பெண்கள் தாம் எம்.எல்.ஏக்களாக பதவி வகித்தனர்.

திரிணாமுல்-காங்கிரஸ் கட்சி கூட்டணியில் 40 பேர் முஸ்லிம் எம்.எல்.ஏக்களாவர். திரிணாமுல் காங்கிரஸை சார்ந்த 25 பேரும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த 15 பேரும் சட்டப்பேரவைக்கு செல்கின்றனர்.

தேர்தலில் படு தோல்விடைந்த ஆளும் இடது சாரிக்கூட்டணியில் இம்முறை 18 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு செல்லவுள்ளனர். அவர்களில் 13 பேர் சி.பி.எம் கட்சியை சார்ந்தவர்கள். AIFB-2, RSP-2, SP-1 ஆகியோரும் அடங்குவர்.

0 கருத்துகள்: