நாளை பகல் 12.15 மணிக்கு, எம கண்டம் முடிந்தவுடன் தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவி ஏற்கிறார் ஜெயலலிதா.
பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா நடக்கிறது. இதனை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாலதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், “புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நாளை பகல் 12.15 மணிக்கு நடக்கிறது. முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்,” என்று கூறியுள்ளார்.
பிற்பகல் 12 மணிக்கு எமகண்டம் முடிகிறது. மாலையில் நல்ல நேரம் இருந்தாலும், புதிய சபாநாயகர் தேர்வு மற்றும் சட்டமன்ற நடைமுறைகளை மேற்கொள்ள தாமதமாகிவிடும் என்பதால், ஜோதிடர் ஆலோசனைப்படி இந்த நேரத்தைத் தேர்வு செய்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுடன் 20 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.
ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவுக்காக நூற்றாண்டுவிழா மண்டபம் படுவேகமாக தயாராகி வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக