தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.4.11

கள்ளக்காதல் கொலை!! பிரபல சாமியார் தலைமறைவு!!

April 29, நெல்லை அருகே உள்ள தச்சநல்லூரை அடுத்த கிராமத்தில் உள்ள கிணற்றில் ஒரு உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் மிதந்தது.

சம்ப

வ இடத்திற்கு தச்சநல்லூர் போலீசார் சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குலவணிகர்புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது43) என்று தெரியவந்தது.

கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய திடுக்கிடும் தகவல்களும்

கிடைத்தன.

குலவணிகர்புரத்தை சேர்ந்த ரவி என்பவர் தச்ச நல்லூரில் லட்சுமி (32) என்ற பெண்ணுக்கு காண்டிராக்ட் முறையில் வீடு கட்டினார்.

அவர் அவ்வப் போது சென்று கட்டிட வேலைக்கான உதவிகள் செய்து வந்துள்ளார். அப்போது லட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

லட்சுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கும் கோவையை சேர்ந்த பிரபல சாமியார் மற்றும் ஜோசியரான மூகாம்பிகைதாசன் என்பவருக்கும் ஏற்கனவே தொடர்பு ஏற்பட்டு இருந்தது.

அந்த தொடர்பின் காரணமாகவே சாமியார் மூகாம்பிகைதாசன் உதவியுடன், லட்சுமி தச்சநல்லூரில் வீடு கட்டி வந்துள்ளார்.

இருவரின் கள்ளக்காதல் விவகாரம் சாமியார் மூகாம்பிகை தாசனுக்கும் தெரியவந்து அவர் லட்சுமியை எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதனால் கோவை சாமியார் மூகாம்பிகை தாசனின் தூண்டுதலின் பேரில் இக்கொலை நடந்திருக்கலாம் என்ற ரீதியில் விசாரணையை தொடங்கினர்.

இதுதொடர்பாக சுப்பிர மணியனின் கள்ளக்காதலி லட்சுமியையும், அவரது உறவினர்கள் 4 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

மேலும் கோவையில் உள்ள பிரபல சாமியார் மூகாம்பிகை தாசனிடம் விசாரணை நடத்த போலீசார் அவரை அழைத்தனர். ஆனால் அவர் போலீசில் ஆஜராகாமல் தலைமறை வாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவரை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்: