வாஷிங்டன், ஏப். 28- நீண்ட கால சர்ச்சைக்கு பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய பிறந்த இடம் குறித்த தகவலை அளித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசுகட்சி சார்பில் போட்டியிட்டார் ஒபாமா. அப்போது இவரின் பிறப்பு மற்றும் இருப்பிடம் குறித்து சர்ச்சை எழுந்தது. இருப்பினும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று அதிபர் பதவியில் அமர்ந்தார்.
இருப்பினும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் சந்தேகங்கள் எழுப்பி வந்தன. இந்நிலையில் வரும் 2012-ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ள ஒபாமா தன்னுடைய பிறந்த இடம் குறித்த சான்றிதழை வெளியிட்டார். அதில் ஹவாய் தீவின் ஹோனோலு நகரில் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி பிறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்கட்சிகளின் போரட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் டான் பெபியர் தெரிவித்தார். அதிபர் பதவி மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் அமெரிக்க பிரஜையாக இருக்க வேண்டும் என்பது நியதியாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக