கடந்த 24-ந்தேதி காலை அவர் மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மறைவு குறித்தம் சந்தேகங்கள் எழுப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவரது மறைவு குறித்து புதிய சர்ச்சைகள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாய்ய்பாபாவின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி சுமார் இருபது நாட்களுக்கு முன்னரே சத்யசாய் அறக்கட்டளை சார்பில் கொள்வனவு செய்யப்பட்டுவிட்டதாக பெங்களூரில் உள்ள சவப்பெட்டி நிறுவன உரிமையாளர் தெரிவித்திருப்பது சாய்பாபாவின் இறப்புக் குறித்த சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
அந்நிறுவன அதிபர் ஒரு தமிழர் என்றும், கடந்த 4ந்திகதி சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இந்தச் சவப் பெட்டியை அவர் கொள்வனவு செய்திருந்தார் எனவும், அப்போது அப் பெட்டி யாருக்கு என்பது தனக்குத் தெரியாது என்றும், சாய்பாபா மறைவு குறித்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது, தான் விற்பனை செய்த அந்த காஸ்ட்லி சவப் பெட்டியில் சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டிருந்தததைக் கண்டபோது தனக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் மீடியாக்களிடம் இவர் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை இந்தப் பெட்டி வாங்கப்பட்ட விபரம், சாய் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர்களுக்குத் தெரியாதிருந்ததும், இந்த விவகாரம் சாய்பாபாவின் உறவினர்களாலேயே கையாளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க ஆந்திர மனித உரிமை ஆணையகத்தில் கடந்த 18-ந்தேதி தலித் ஜனசபை அமைப்பு , சாய்பாபாவின் மருத்துவக் கவனிப்புக்குறித்து சந்தேகம் தெரிவித்து, விசாரிக்கக் கோரியுள்ளது. இதையடுத்து, மனித உரிமை ஆணையகம், மாநில அரசு இது தொடர்பில் விளக்கம் அளித்து பொது மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும் எனக் கோரியது.
இக் கோரிக்கைக்கு அமைவாக, சாய்பாபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே மாநில அரசு அதிகாரிகள் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை நேரடியாக கண்காணித்து வந்தனர். சாய்பாபாவின் மருத்துவ அறிக்கை முழுவதையும் நாங்கள் பார்த்து விசாரணை நடத்தினோம். அவரது சாவில் மர்மம் எதுவும் இல்லை. அவரது மரணம் இயற்கையானது என அவர்கள் தெரிவித்துள்னர்கள்.
பிரபலங்களின் மறைவுக்குப் பின்னால், அவர்களின் சொத்துக்கள் தொடர்பில் அவரது வாரிசுகளுக்கும், அமைப்புக்களுக்கமிடையில் நடைபெறும் இவ்வாறான சர்ச்சைகளுக்கும், சந்தேகங்களுக்குமிடையில், ஆன்மீகத் தலைவர் என அறியப்பட்ட சாய்பாபாவின் மறைவும் அமைந்துவிட்டது, அவர்களது பக்தர்களுக்கு அதிர்ச்சி தருவதாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக