சிகாகோ, - வறுமையை ஒழிக்க வேண்டுமானால் நல்ல உலகத்தை படைக்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் கலாமுக்கு பொதுவரவேற்பு நிகழ்ச்சியை, இந்திய - அமெரிக்க மையம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் உரையாற்றிய அப்துல் கலாம் பேசியதாவது:
நாட்டில் ஊழலைத் தடுக்க வேண்டும். எகிப்து நாட்டில் புரட்சி வெடித்ததற்கு இது தான் காரணம்.
புதுமையான கருத்துக்களை அரசியலாக்கக் கூடாது. வறுமையை ஒழிக்கவும், சுத்தமான குடிநீர் மற்றும் எரிசக்தி கிடைக்கச் செய்யவும், தரமான கல்வி கிடைக்கவும் நல்ல உலகத்தை படைக்க வேண்டும். அணு சக்தி தூய சக்தி தான். எனவே, இந்த சக்தியை உலகம் முழுவதும் பயன்படுத்தச் செய்ய வேண்டும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக உள்ளது. இன்னும் ஓராண்டில் இது 10 சதவீதத்தை எட்டி விடும். 2020ல் இந்தியா பொருளாதாரத்தில் வல்லமை படைத்த நாடாகி விடும். பார்லிமென்டில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு கலாம் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக