தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.4.11

தேசத்தை சீர்குலைத்து விட்டனர் : மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை: அண்ணா ஹசாரே

புதுதில்லி, ஏப்.8    ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட மசோதாவை அமல் படுத்தக்கோரி தில்லியில் காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர்ந்து 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  உண்ணாவிரதம் குறித்துப் பேசிய அவர், தன்னால் நிச்சயம் ஒருவாரம் நலமுடன் இருக்க முடியும் என்பதால் தனது உடல்நிலை குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தில்லியில் இன்று  (ஏப்.7) அவர் அளித்த பேட்டியில் : தனது அறப்போராட்டத்துக்கு திரண்டுள்ள பெரும் ஆதரவு உத்வேகத்தை அளிக்கிறது. இன்றும் நிறைய பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். நிர்வாக சீர்திருத்தம்

வேண்டுமானால், மக்கள் இந்த போராட்டத்தில் நிச்சயம் பங்கேற்க வேண்டும். அரசியல்வாதிகள் ஆண்டு ஆண்டு காலமாக நமது தேசத்தை சீர்குலைத்து உள்ளனர். எந்த ஒரு அரசியல் கட்சியும் முழுமையாக பரிசுத்தமானதாக இல்லை.

தன்னால் நிச்சயம் ஒருவாரம் நலமுடன் இருக்க முடியும் என்பதால் தனது உடல்நிலை குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். சிறிதளவு மட்டுமே பலவீனமாக உணர்கிறேன். 1.5 கிலோ எடை குறைந்துவிட்டது. கடவுள் என்னுடன் இருக்கிறார். அவர் காப்பாற்றுவார் என ஹசாரே குறிப்பிட்டார்.

மிரட்டல்கள் இருந்தாலும் உண்மையை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12 நீதிமன்ற வழக்குகளை நான் சந்தித்திருக்கிறேன், எனக்காக பணம் வாங்காமல் வாதாடும் வழக்கறிஞர்கள் உள்ளனர். உண்மையை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது என ஹசாரே கூறினார்.

ஹசாரேயின் உண்ணாவிரதம் தவறான பாதை என காங்கிரஸ் கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஹசாரே, நேற்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒரு தவறான பாதை எனக் கூறியுள்ளார். மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது அவர் பிறந்திருப்பார் என நான் நினைக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் கடைசி போக்கிடமாக பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்: