கார்த்தூம்:வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலின் நோக்கம் தெரிவிக்கப்படவில்லை.
சூடான் கடற்கரைக்கு அருகே போர்ட் சூடான் நகரத்தில் இத்தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். இத்தாக்குதலில் 2 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் விமானத்திலிருந்து தொடுக்கப்பட்ட ஏவுகணை காரில் தாக்கியதால் இருவர் மரணமடைந்துள்ளனர். இத்தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் என
சூடானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அஹ்மத் கர்த்தி குற்றஞ்சாட்டினார்.இத்தாக்குதல் குறித்து இஸ்ரேல் மறுப்பு தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் பத்திரிகைகளும் தாக்குதலை உறுதிச் செய்துள்ளன.
வான்வழித் தாக்குதலில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை. சில இஸ்லாமிய போராளி இயக்கங்களுக்கு சூடான் உதவுவதாக முன்னர் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியிருந்தது.
காஸ்ஸாவில் இயங்கும் ஹமாஸ் போராளிகளுக்கு சூடானிலிருந்து ஆயுதம் வழங்கப்பட்டுவதாக இஸ்ரேல் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது. இக்குற்றச்சாட்டுகளை சூடான் மறுத்திருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக