சிரிய தலைநகர் டமாஸ்கஸ்சிற்கு அருகில் உள்ள புறநகர் பகுதியில் கழுத்து அரிந்த 30 தலையில்லா முண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடும் சித்திரவ தை செய்யப்பட்ட பின்னர் கழுத்துக்கள் வெட்டப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிரியாவின் பார்சா பகுதியில் போராளிகளுக்கும், சிரிய படைகளுக்கு மிடையே நடைபெற்ற மோதலின் பின்னர் சிரியப் படைகள் பின்தள்ளப்பட்ட பகுதியில் கண்டெடுக்க ப்பட்டுள்ளன.சிரிய போர் தொடர்பான ஆய்வுகளின் பொதுக்குழு கூறும்போது கைதானவர்களின் அடை யாளம் தெரியக்கூடாது என்பதற்காகவே தலைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக
தெரிவித்தது, இவர்களின் கருத்துப்படி சுமார் 50 உடலங்கள் கிடப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கழுத்தறுப்பு வேலைகள் நேற்று நடைபெற்றுள்ளதாகவும் 22 மாத காலப் போரில் இது மிகவும் நயவஞ்சகமான செயலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று வருட முடிவுக்கு முதல் நாள் வேறு இடங்களில் நடைபெற்ற போர்களில் போராளிகள், படைகள், பொது மக்களென்று மொத்தம் 160 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
சர்வதேச நாடுகள் களமிறங்காமல் கட்டு மீறிப்போகும் இந்தக் கொலைகளை நிறுத்த இயலாது என்பது கவனிக்கத்தக்கது.
சிரியாவில் நடக்கும் மானிட விரோதப் போர் தனது இரத்தம் படிந்த அத்தியாயங்களை இன்று முப்பது முண்டங்களை வீசி நரபலியாடி முடித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக