தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.1.13

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் மீண்டும் தீவிரமடையும் உண்ணாவிரதம்!


செங்கல் பட்டு அகதிகள் முகாமில் உள்ள 7 பேர் தங் களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றக்கோரி 9 வ து நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகி ன்றனர்.இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு டிச.23ம் திக தி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதில் தவத பன், காண்டீபன், செல்வராஜ், உள்ளிட்ட 6 பேரி ன் உடல் நிலை மோசமானதால் அவர்கள் செங்கல்ப ட்டு அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

எனினும் அங்கும் விடாப்பிடியாக உண்னாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். இதையடுத்து, தற்போது மேலும் ஐந்து பேர் செங்கல்பட்டு முகாமில் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். குற்றம் சுமத்தப்பட்டவர்கள், வழக்கில் இணைக்கப்பட்டவர்கள், வழக்கில் பிணை கிடைத்தவர்கள், வழக்கு விசாரணை முடிந்து விடுதலையானவர்கள் என பலரும் ஒரே முகாமில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது ஏன் என ஏற்கனவே அவர்கள் பல முறை கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கியூப்பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 நைஜீனியர்கள் உள்ளிட்ட 41 ஈழத்தமிழர்கள் செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: