தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.1.13

கிங்பிஷர் விமானச்சேவையின் உரிமம் இரத்தானது!


கிங்பிஷர் விமான நிறுவனத்தின் விமானச்சேவை உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய விமா ன கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.ஏற்கன வே லைசென்ஸ் காலாவதியானதை அடுத்து, அதை புதுப்பித்துக்கொள்ள புதிய காலக்கெடு கொடுக்கப்ப ட்டது. தற்போது நேற்று டிச.31ம் திகதியுடன் அக்கா லக்கெடு முடிவடைந்ததை அடுத்தே கிங்பிஷர் வி மான சேவையின் லைசென்ஸ் இரத்து செய்யப்பட் டுள்ளது.கிங்பிஷர் விமான
சேவை ஊழியர்கள் எதிர்கொண்ட சம்பள பிரச்சி னையை அடுத்து அவர்கள் மேற்கொண்டிருந்த தொடர்ச்சியான வேலை நிறு த்த போராட்டங்களினால் கடந்த 2012 அக்டோபர் மாதம் முதல் கிங்பிஷர் விமான சேவை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 250 கோடி டாலர் கடனிலும் மூழ்கியது.

கடனிலிருந்து மீள்வதற்கான நிதி சீர்திருத்த திட்டத்தை கையளிக்கும் பட்சத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மிண்டும் விமான சேவையை தொடக்க அனுமதிக்கப்படும் என விமான போக்குவரத்து ஆணையகம் தெரிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் தனது மறுசீரமைப்பு திட்டத்தை கிங்பிஷரும் கையளித்தது. ஆனால் அதில் முதலீடு திரட்டுவது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை என மத்திய விமானத்துறை அமைச்சர் அஜித் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது கிங்பிஷர் விமான நிலையத்தின் லைசென்ஸை இரத்து செய்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் தலைவர் (DGCA) அருண் மிஷ்ரா தெரிவித்துள்ளார். சேவைகளை தொடர்ந்து நடத்துவதற்கு தேவையான நிதி மூலம் எங்கிருந்து கிடைக்கப்பெறுகிறது என போதுமான தரவுகளைத் தர அவர்கள் மறுத்துவிட்டனர் என அருண் மிஷ்ரா கூறியுள்ளார். எனினும் தாம் மீண்டும் புத்துயிர் பெற்று சேவையை தொடக்குவதற்கு, இருவருட கால எல்லை இருப்பதாக கிங்பிஷர் தெரிவித்துள்ளது.

கிங்பிஷரில் தொடரும் நிதிச்சிக்கலை சரிசெய்ய தற்போது வெளிநாட்டு முதலீடு தொடர்பில் கிங்பிஷர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 2012 கிங்பிஷர் நிறுவனத்திற்கு மிக மோசமான ஆண்டாக மாறிவிட்டது.

எனினும் கடந்த 2011 முடிவடையும் வரை, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விமான சேவையாக கிங்பிஷர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: