தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.1.13

சீனாவில் ஆறுவயது மகனை சாகும்வரை சவுக்கால் அடித்து கொன்ற தந்தை அதிரடி கைது.

சீனாவின் லோங்காங் மாவட்டத்தை சேர்ந்தவர் செ ங் ஜங்பெங். இவருக்கும் 'எனக்கொரு மகன் பிறப்பா ன் - அவன் என்னைப் போலவே இருப்பான்' என்ற எ திர்கால கனவு இருந்தது. ஆனால், இவருக்கு பிறந்த ஆசை மகன், ஜியாஹோ-வின் குணாதிசயமோ, தந் தையின் கனவுக் கோட்டையை தகர்க்கும் விதமாக அமைந்திருந்தது.ஜியாஹோ, வளர வளர அவனது கெடுகுணமும் சேர்ந்து வளரத் தொடங்கியது. பள்ளி க்குச் சென்றால் மகன் திருந்தி விடுவான் என எதிர் பார்த்த தந்தை
அவனை அருகிலுள்ள பள்ளியில் சே ர்த்தார். ஆனால், ஆறு வயதிலேயே அட்டூழியக்கா ரனாக மாறிவிட்ட மகனை, செங்
ஜுங்பெங் பலமுறை அன்பாக புத்திமதி கூ றியும், சிலமுறை கண்டித்தும், தண்டித்தும் அவன் திருந்திய பாடில்லை.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவரை சந்தித்த ஜியாஹோ-வின் ஆசிரியர், அவரின் ஆத்திரத் தீக்கு ஆவேச நெருப்பு மூட்டி விட்டார். வகுப்பில் படிக்கும் சக மாணவர்களை, அடித்து, உதைத்து, மிரட்டி ஜியாஹோ பணம் பறிப்பதாகவும், அந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து உங்கள் மகனை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்து அவனை திருத்துங்கள் என செங் ஜங்பெங்-கிற்கு ஆசிரியர் அறிவுரையும் தந்துவிட்டுச் சென்றார்.

அன்றிரவு, மனைவி வேலைக்குச் சென்றிருந்த போது, தனிமையில் அமர்ந்திருந்த தந்தை, மகனை எப்படி திருத்துவது? என தீவிரமாக ஆலோசித்தார். சுவற்றில் மாட்டியிருந்த சவுக்கை எடுத்து, கை ஓயும் வரை சுமார் 1/2 மணி நேரம் விளாசிய அவர், இரவு 11 மணியளவில் மகனை படுக்க வைத்தார்.

இரவு 2 மணியளவில் திருந்தாத மகனை பாசத்தோடு பார்க்கச் சென்ற தந்தை திடுக்கிட்டார். காயங்களில் இருந்து வழிந்த ரத்தம், உடைகளை நனைத்த நிலையில் உடல் சில்லிட்ட நிலையில் இருந்த மகனை ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும், சிறுவன் ஜியாஹோ சிகிக்சை பலனின்றி, சில மணி நேரங்களில் உயிரிழந்தான்.

ஜென் சுங்பெங்-கை கைது செய்த லோங்காங் மாவட்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 'என் வம்சப் பெயரை நிலைநாட்ட வேண்டிய அன்பு மகனை நான் இழந்து விட்டேன். இனி நான் என்ன சொன்னாலும், அது அர்த்தமற்ற வார்த்தையாக தான் தோன்றும்' என கண்ணீர் மல்க கூறுகின்றார், செங் சுங்பெங்.

0 கருத்துகள்: