டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி களுக்கு ஆதரவாக வாதிடுவதற்காக எந்த வழக்கறி ஞரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் மரு த்துவ கல்லூரி மாணவி ஓடும் பஸ்ஸில் பாலியல் ப லாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த டிச.29ம் திகதி 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்ய ப்பட்டனர். 13 நாள் போராட்
டத்தின் பின்னர் குறித்த மாணவி உயிரிழந்தார். இந் நிலையில் குற்றவாளிகள் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்ற ச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வழமையாக அச்சிட்ட வடிவில் தாக்கல் செய்யப்படும் இக்குற்றப்பத்திரிகை இம்முறை இரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக கணிணிவழி 1000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பிலான வழக்கை தினந்தோறும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் வழக்கு விசாரணைகள் ஒரு மாதத்தில் வழக்கு விசாரணைகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையிலேயே பலாத்கார குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதாட முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் வாதாட கூடாது எனவும் நீதிமன்ற நீதிபதிகள் ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர்.
இதேவேளை குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் இதுவரை வெளிவந்த தகவல்களின் படி குறித்த மாணவியை பேருந்திலிருந்து வீசிய பின்னர் பஸ் சக்கரத்தினால் அவரை ஏற்றிக்கொல்லப் பார்த்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் பஸ்ஸில் அப்பெண் தன்னை பலவந்தப்படுத்திய 3 பேரை எதிர்த்து கடுமையாக போராடியுள்ளதும், அப்போது அவர்களை கடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளின் உடம்பில் இருந்த காயங்களின் படி இது நிரூபனமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது மாணவியையும், அவரது நண்பரையும் இரும்புக்கம்பியால் குற்றவாளிகள் கடுமையாக தாக்கி அதன் பின்னரே அவர்கள் இருவரும் மயக்கமடைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக