தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.1.13

புலிப்பயங்கரவாத பூச்சாண்டி போய் இப்போ ஹலால் அல்-குவைதா பயங்கரவாதம் ஆரம்பம்


ஹலால் இலச்சினையை பெற்றுக்கொள்வதற்காக பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அகி ல இலங்கை ஜம்மியத்துல் உலமா, உலாமக்கள் அ மைப்பு ஆகியவற்றுக்கு செலுத்தும் பணம், சர்வதேச பயங்கரவாதிகளின் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டு ள்ளதாக பொதுபல சேனா நேற்று குற்றம் சுமத்தியு ள்ளது.அல்-குவைதா போன்ற சர்வதேச பயங்கரவா த அமைப்புகளுக்கு இந்த பணம் கிடைப்பதாகவும் இ து குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், பாதுகா ப்புச் செயலாளர் கோத்தபாய
ராஜபக்ஷவும் உடனடியாக கவனம் செலுத்த வே ண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலைமை காரணமாக தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் ஹலால்; இலச்சினை மூலம் கிடைக்கும் பணம் குறித்து, புலனாய்வு பிரிவினரும், தேசிய வருமான வரி திணைக்களமும் உடனடியாக தேடிபார்க்க வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இயங்கும், பொயிண்ட்டிட் பெஸ்கல் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் சன்விவ் தொலைக்காட்சி இந்த நிலைமை குறித்து தொடர்ந்தும் பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹலால் இலச்சினை தொடர்பாக முஸ்லிம்களுக்கு இருக்கும் உரிமை தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. முஸ்லிம் மக்களை இலக்காக கொண்டு தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக சந்தையில் வெளியிடப்படும் ஹலால் குறித்து பொதுபல சேனா அமைப்பு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. இந்த நிதி பயங்கரவாதிகளின் நிதியத்திற்கு கிடைத்து வருவதே பிரச்சினையானது எனவும் நந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: