டெல்லியில் ஓடும் பேருந்தில் வன்புணரப்பட்டும் தாக்கப்பட்டும் கொடுமைக்காளாக்கப்பட்ட மருத்து வக் கல்லூரி மாணவி நிர்பயா (பயமற்றவள் என்பது பொருள்) உயிருக்குப் போராடி வரும் சூழலில் அவ சரவிமானம் (ஏர் ஆம்புலன்ஸ்) மூலம் மேல் சிகிட் சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு ள்ளார்.சிங்கப்பூரின் பிரபலமான உயர்தர சிகிட்சைக் கான மருத்துவ நிலையமான மெளண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படுகிறார். மாணவி நிர்பயாவின் உயிரைப் பாதுகாப்பதே எங் களின்
பிரதான நோக்கம் என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறினார். "சிங்கப்பூரின்
மெளண்ட் எலிசபெத் மருத்துவ நிலையம் நவீன வசதிகளுடன் உறுப்பு மாற்று சிகிட்சை முறைகளிலும் சிறந்துவிள ங்கும் ஒன்று" என்றார் அவர்.மாணவி நிர்பயாவுடன் சப்தர்ஜங் மருத்துவம னையின் தீவிர கண்காணிப்பு சிகிட்சை மையத் தலைமை மருத்துவர் பி.கே. வர்மா மற்றும் மருத்துவக் குழுவும், மாணவியின் பெற்றோரும் சென்றுள்ளனர்.நிர்பயாவை சிங்கப்பூருக்கு சிகிட்சை மேற்கொள்ள அனுப்புவது என்ற முடிவை மத்திய அமைச்சரவையே எடுத்துள்ளதாகத் தெரிகிறது.பிரதான நோக்கம் என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறினார். "சிங்கப்பூரின்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக