மது அருந்திவிட்டு, கார் ஓட்டிய அமெரிக்க எதிர்க்கட்சி எம்.பி., கைது செய்யப்பட்டு உள்ளார்.அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த, மேல்சபை எம்.பி., மைக்கேல் கிராப்போ. இடாகோ என்ற இடத்திலிருந்து, வாஷிங்டன் நோக்கி காரில் வந்தபோது, விர்ஜினியா மாகாண போலீசார், இவரது காரை தடுத்து நிறுத்தி பரிசோதித்தனர். பரிசோதனையில், இவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக, போலீசார் இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 50 ஆயிரம் ரூபாய் சொந்த ரொக்க ஜாமினில், இவர் விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
"மது அருந்திவிட்டு, கார் ஓட்டியது தவறு தான், இதற்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அபராதமாக செலுத்த தயாராக உள்ளேன்' என, மைக்கேல் மன்னிப்பு கேட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக