நடிகர் கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. டிரெய்லரை வெளியிட்டு கமலஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.‘விஸ்வரூபம்’ இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா?அப்படி நான் படம் எடுப்பேனா? இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனபதே என் விருப்பம்.நான் காந்தியின் பக்தன். இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன்.
மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன். எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை. இந்த படமும் அப்படித்தான் இருக்கும். காந்தீய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும்.
விஸ்வரூபம்’ ஹாலிவுட் தரத்தில் இருப்பதால் அங்கு கொண்டு போவீர்களா?அதற்கான முயற்சிகள் நடக்கிறது.ஹாலிவுட் படத்தில் எப்போது நடிப்பீர்கள்? ஹாலிவுட் படத்துக்கான கதையை என்னையே எழுத சொல்லி உள்ளனர். கதை எழுதி வைத்துள்ளேன். அதை செதுக்க வேண்டும். அதன்பிறகு நடிப்பேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக