பாகிஸ்தானில் தாலிபான் இயக்கத்துக்கு எதிராக பிர ச்சாரம் செய்த மலாலாவைச் சுட்டவனின் சகோதரி, மலாலாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.பாகிஸ்தா னில் தாலிபான்களுக்கு எதிராக இளம் பெண் மலா லா தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் அவர் துப்பாக்கியால்தலை யில் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். அவருக்கு தற்போது இங்கிலாந்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மலாலாவைச் சுட்ட தா லிபான் இயக்கத்தைச் சேர்ந்த அட்டஹுல்லாஹ் கா ன் என்பது தெரிய
வந்துள்ளது.இது குறித்து பேசிய அட்டாஹுல்லாஹ்வின் சகோதரி ரெஹானா ஹலீம், இந்த தகவல் தெரிய வந்ததும், தங்களது குடும்பமே அதிர்ச்சி அடைந்ததாகவும், தங்களது குடும்பத்துக்கு மிகப்பெரிய அவமானத்தை தனது சகோதரன் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், எனது சகோதரனின் செயலுக்கு அவனது சார்பில் நானும் எனது குடும்பமும் மலாலாவிடம் மன்னிப்புக் கோருகிறோம். மலாலாவிடம் நாங்கள் மன்னிப்புக் கோரியதை தெரிவியுங்கள். மலாலாவும் எனது சகோதரி போலத்தான். அவள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், மீண்டும் தனது மகிழ்ச்சியான வாழ்க்கையைத் துவங்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். என்னையும், எனது குடும்பத்தையும் மலாலா எதிரியாக பாவிக்க மாட்டாள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக