தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.11.12

தமிழக முஸ்லிம்களை பார்த்து இலங்கை முஸ்லிம்கள் பாடம்கற்க வேண்டும்


முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் துப்பாக் கி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக இத் திரைப்பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டதை வரவேற்பதோடு இதற்காக ஜனநாயக ரீ தியல் போராட்டம் நடத்திய தமிழக முஸ்லிம்களை பார்த்து இலங்கை முஸ்லிம்கள் பாடம்கற்க வேண் டும் என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்து ள்ளது இது குறித்து உலமா கட்சித் தலைவர் மௌல வி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம் சமூகத்தின்
விடுதலைப்போராட்டத்தை சினிமாவில் கொச்சைப்படுத்துவதை இந்திய, அமெரிக்க சினிமாக்கள் நீண்ட காலமாகவே செய்து வருகின்றன. சமூக விடுதலைப்போராளிகள் சில தவறுகளை விடுகிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஆனாலும் திரைப்படங்களில் மிக மோசமானவர்களாக முஸ்லிம்கள் மட்டுமே சித்திரிக்கப்பட்டு வருவதை அறிவோம்.
துப்பாக்கி திரைப்படத்திற்கெதிராக தமிழ் நாட்டு முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்ததை நாம் பாராட்டுகின்ற அதேவேளை இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நீக்குவதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் உடன் பட்டுள்ளதால் மேற்படி திரைப்படம் இலங்கையிலும் திரையிடப்பட்டுள்ளதால் அதில் அக்காட்சிகள் நீக்கப்பட்டதாக இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனம் இன்னமும் அறிவிக்காதது கவலை அளிக்கிறது.
ஆகவே மேற்படி காட்சிகளை இலங்கையில் நீக்குவதற்கு அல்லது முற்றாக இப்படத்தை தடை செய்வதற்கு இலங்கை முஸ்லிம்கள் விழிப்புணர்வு பெறுவதோடு முஸ்லிம் அமைச்சர்களும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இவற்றுக்காக உடனடியாக முன்வர வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

0 கருத்துகள்: