தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.11.12

கருக்கலைப்பு உரிமை குறித்து அவசர முடிவு எடுக்க மாட்டோம். சவீதா மரணம் குறித்து அயர்லாந்து பிரதமர் அறிவிப்பு.


இந்திய வம்சாவளி பெண் சவீதா மரணத்தால், கருக்கலைப்பு உரிமை குறித்து அவசர முடிவு எடுக்க மாட்டோம் என்று அயர்லாந்து பிரதமர் அறிவித்தார்.இந்திய வம்சாவளிப்பெண் மரணம்அயர்லாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி பெண் டாக்டர் சவீதாவுக்கு (31), திடீரென கருச்சிதைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கால்வே பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது கர்ப்பப்பையில் இருந்த கருவுக்கு இதயத்துடிப்பு இருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர். அயர்லாந்து
கத்தோலிக்க நாடு என்பதால் அங்கு கருக்கலைப்பு குற்றமாக கருதப்படுகிறது. எனவே சவீதாவுக்கு டாக்டர்கள் கருக்கலைப்பு செய்ய மறுத்துவிட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பிரச்சினை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கான அயர்லாந்து தூதர் பெலிமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் மதுசூதன் கணபதி அழைத்து கண்டனம் தெரிவித்தார்.

துணைப்பிரதமருடன் தூதர் சந்திப்பு

இந்த சம்பவம் தொடர்பாக அயர்லாந்துக்கான இந்திய தூதர் தேபசிஷ் சக்ரவர்த்தி, அயர்லாந்து நாட்டின் துணைப்பிரதமரும், வெளியுறவுத்துறை மந்திரியுமான ஏமோன் கில்மோரை சந்தித்து, சவீதா மரணம் குறித்து இந்தியாவின் கவலையை தெரிவித்தார்.
இத்தகைய சம்பவம் மீண்டும் நடந்து விடாமல் தடுக்க தேவையான நடவடிக்கையை அயர்லாந்து எடுக்கும் என தான் நம்புவதாக கில்மோரிடம் தேபசிஷ் சக்ரவர்த்தி தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தையும் அவர் தெரிவித்தார். கில்மோரும் சவீதா மரணத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்தார். விரைவில் சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தி முடிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பிரதமர் அறிவிப்பு

இதற்கிடையே அயர்லாந்து பிரதமர் என்டா கென்னி கூறியதாவது:– இந்த பிரச்சினையில் வல்லுனர் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அவசரப்பட்டு கருக்கலைப்பு உரிமை குறித்து முடிவு எதையும் எடுத்து விட மாட்டோம். வல்லுனர் குழுவின் அறிக்கை வந்த பின்னர் ஆராய்ந்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்: