காசா மீது இஸ்ரேல் ஐந்தாவது நாளாக தனது தாக்கு தல்களை தொடர்ந்து வருகிறது.வான் வெளிமூலமா கவும் கடல் பரப்பின் ஊடாகவும் எரிகணை தாக்குத ல்களை இஸ்ரேல் நடத்திவருவதால், காஸா மற்று மொரு யுத்தபிரதேசமாக தற்போது மாற்றமடைந்து வருகிறது. நேற்றைய இஸ்ரேலின் எரிகணை தாக்கு தல்களில் காசாவிலிருந்த ஹமாஸ் ஊடக தலை மைக்காரியாலயங்கள் அமைந்த இரு கட்டிடங்கள் முற்றாக
சேதமடைந்துள்ளன. இதில், பிரித்தானியா வின் SKY, ITN தொலைக்கா
ட்சிகளும் சேவைகளும் இயங்கிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காஸாவில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகமும் இஸ்ரேலிய தாக்குதலில் முற்றாக சேதமடைந்துள்ளது.சேதமடைந்துள்ளன. இதில், பிரித்தானியா வின் SKY, ITN தொலைக்கா
எனினும், காசாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி நேற்று 8 ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டாதாகவும் இவற்றில் மூன்று இஸ்ரேலின் நிலப்பரப்புக்குள் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
இதையடுத்து இஸ்ரேலிய படைவீரர்கள் எந்தவொரு பதில் தாக்குதல் நடவடிக்கையையும், எங்கிருந்தும் மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெடன்யாகு அறிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 50க்கு மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 400க்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் மோதல் வெடித்திருந்தது.
ஹாமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதிலிருந்து பெருமளவிலான பொதுமக்கள் Cross-Fire நிகழ்வுகளில் கொல்லப்பட்டிருப்பதாகவும், மக்கள் அத்தியாவசியமாக உணவுகள் வாங்குவதை தவிர்த்து, கடைத்தெருவுக்கென வெளியில் இறங்குவதை முற்றாக தவிர்த்துள்ளதாகவும் பிபிசியின் ஊடகவியலாளர் ஒருவர் காசாவிலிருந்து தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களையும், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்களையும் தவிர காஸாவின் நகர்த்தெருக்களில் நீங்கள் வேறு எதையும் பார்க்க மாட்டீர்கள் என்கிறார் அவர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக