சிவசேனா கட்சித்தலைவர் பால் தாக்கரேயின் மறை வு மற்றும் இறுதிச்சடங்கை ஒட்டி மும்பையில் கடந் த சில தினங்களாக வர்த்தக நிலையங்கள், போக்கு வரத்துக்கள் அனைத்தும் முற்றாக ஸ்தம்பிதமாகியி ருந்தன.நேற்று அறிவிக்கப்படாத பந்த்தாக மும்பை காட்சியளித்தது. எனினும் நேற்று கட்டாயத்தின் பெ யரிலேயே அனைத்தும் ஸ்தம்பிதமாகியிருந்தது எ னும் பொருள்படும் விதத்தில் 21 வயது இளம் யுவதி ஒருவர் பேஸ்புக்கில் பக்க
த்தில் அப்டேட் செய்த ஸ்டேட்டஸ் ஒன்று அவரது கைதுக்கு காரணமாகியுள்ளது.சஹீன் தாதா எனும் இப்பெண், தனது பேஸ்புக்கில் 'ஒவ்வொரு நாளும் பால் தக்கரேயை போன்று பலர் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். அதற்காக ஒருவர் பந்த் அனுசரிக்க வேண்டிய அவசியமில்லை' என கூறியிருந்தார்.
இது, மதரீதியான உணர்வுகளை புண்படுத்தியிருப்பதாக கூறி, தகவல் தொழில்நுட்ப குற்றப்பிரிவில் அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஸ்டேட்டஸை லைக் செய்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று சிவசேனா கட்சித்தொண்டர்கள், அப்பெண்ணின் உறவினர் ஒருவரை தாக்கியிருப்பதாக, 'த டைம்ஸ் ஆஃப் இந்தியா' கூறியுள்ளது. இத்தனைக்கும் அப்பெண், அந்த ஸ்டேட்டஸை திரும்ப பெற்றுக்கொண்டு மன்னிப்பும் கோரியிருக்கிறார். அப்படியிருந்தும் இவ்வளவு சம்பவங்களும் நடந்துள்ளன. அப்பெண்ணுக்கு எதிராக காவல்துறையிடம் புகார் கொடுத்தவர் அப்பெண்ணின் பேஸ்புக் பக்கத்தில் நண்பராக இருப்பவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் சட்டப்பிரிவுகள் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுவது இது முதல்தடவையல்ல என்கிறார் இணையம் மற்றும் சமூகத்திற்கான பொறுப்பாளர் பிரனாஷ் பிரகாஷ்.
பால் தக்கரே இதுவரை எத்தனை பேரின் மனங்களை நோகடிக்க செய்திருப்பார். ஆனால் அவர் மீது கூட ஓரிரு தடவைகள் தான் குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டிருந்தன. செக்க்ஷன் 295இன் படி, பேஸ்புக் ஸ்டேட்டஸுக்காக ஒருவரை கைது செய்யமுடியாது என்கிறார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக