காசா, இஸ்ரேல் இடையே நடைபெரும் தாக்குதல்க ளை நிறுத்தக்கோரி உடனடி யுத்த நிறுத்த உடன்படி க்கை ஒன்றிற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீன் மூன் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.காசா மற்றும் இஸ்ரேல் இடையிலான தாக்குதல்கள் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் ஹமாஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான தமது இராணு வ நடவடிக்கைகளை கணிசமான அளவில் விரிவுப டுத்த தான்
தயாராக இருப்பதாக இஸ்ரேலியப் பிரத மர் பென்ஜெமின் நெதன்யா
ஹு கூறியுள்ளார். மேலும் இஸ்ரேலிய தாக்குதல் களில் இதுவரை அறுபதுக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிரு ப்பதுடன், இவர்களில் பாதிக்கும் அதிகமானோர் பொதுமக்கள் என்று தகவல் கள் வெளியாகியுள்ளன.தயாராக இருப்பதாக இஸ்ரேலியப் பிரத மர் பென்ஜெமின் நெதன்யா
இதனிடையே காசா பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலுக்கு இடையே யுத்த நிறுத்தத்தை கொண்டுவரும் முயற்சியில் எகிப்து இறங்கியிருப்பதுடன் இதற்கான பேர்ச்சுவார்த்தைகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேலிய தூதுக்குழுவொன்றும் இதில் கலந்துகொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இந்நிலையிலேயே இரு தரப்பினருக்கிடையே யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றிற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீன் மூன் அவசர அழைப்பு விடுத்துள்ளதுடன் கெய்ரோவில் நடைபெருகின்ற பேர்ச்சுவார்த்தையில் அவர் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
ருவெண்டாவை போன்று, இலங்கையிலும் இறுதிக்கட்ட யுத்தத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக விசாரணை அறிக்கைகள் அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தனது தவற்றை ஐ.நா ஒப்புக்கொண்டது. இதையடுத்து ஊடகங்கள் ஐ.நா மீது தமது அதிருப்தியை வரிசையாக வசைபாடிவருவதால், காசா விடயத்தில் பான் கீ மூன் விழித்துக்கொண்டார் எனவும் அதன் எதிரொலியே இந்த அவசர அறிவிப்பு எனவும் கூறுகிறார்கள் அரசியல் அவதானிகள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக