சிவசேனா பால் தாக்ரே மரண ஊர்வலம் அன்றைய தினம் மும்பை கடையடைப்பை பேஸ்புக்கில் விமர் சித்த இளம்பெண்கள் இருவர் மீதான கைது நடவடிக் கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிவசேனா க ட்சி நிறுவனர் பால் தாக்கரே மறைவைத் தொடர்ந்து நேற்றும் மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டிருந் தன.ஆனால் அச்சத்தினால்தான்
இந்த கடையடைப்பு என்றும் மரியாதைக் காக அல்ல என்றும் ஷஹீன் தாதா என்ற பெண் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தோழி ரேனு (LIKE) விருப்பம் செய்துள்ளார் .
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க கொண்டு சென்றனர். ஆனால் ஜாமினில் வெளிவரக்கூடிய வழக்கு என்பதால் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா அரசின் கைது நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ, முதலமைச்சர் பிரித்விராஜ் சவானுக்கு கண்டனம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். தனிநபர் கருத்துரிமையை பாதிக்கும் வகையில் காவல்துறையினர் செயல்படுவதாக சமூக அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நன்றி: புதியதலைமுறை இணையதளம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக