இரண்டு நாட்களாக நாகை, நெல்லூருக்கு இடையே மையம் கொண்டிருந்த நீலம் புயல், இன்று மாலை 7 மணி அளவில் மாமல்ல புரத்தில் கரையைக் கடந்த து.இன்று மாலை 4.30 மணிக்கு கரையைக் கடக்கத் துவங்கிய நீலம் புயல், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் நகர் ந்து, திருவண்ணாமலை, வேலூர் வழியாக ஆந்திரா வுக்கு நகர்ந்து வலுவிழந்ததாகத் தெரிகிறது. எனினு ம் தமிழகத்தில் மழை படிப்
படியாக குறையும் என்று, சென்னை வானிலை மை யம் தெரிவித்து இருக்கிறது.
நீலம் புயல் காரணமாக வட தமிழ் நாட்டில் நல்ல மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமேற்குப் பருவமழை அளவு, மூன்று மாதங்களுக்குப் பெய்தால் 42 சென்டிமீட்டர் கிடைக்கும் என்றும் ஆனால் இந்த இரண்டு நாட்களில் 24 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டிருந்ததுடன், கடலோர மக்கள் தாழ்வான இடங்களிலிருந்து அப்புறப் படுத்தப்பட்டிருந்தனர். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இன்று 3 மணிக்கு வீட்டுக்கு அனுப்ப பட்டனர் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது
இன்று மாலை தமிழக அரசின் அமைச்சரவைக் கூடி, புயல் நிவாரணம் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. மழை நீடிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக