கோயம்புத்தூர்: கோவை பள்ளிக் குழந்தைகள் இ ருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோகரனுக்கு கோவை நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப் பளித்திருக்கிறது.வழக்கு என்ன?கடந்த 2010ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சிறுமி முஸ்கான் மற்றும் சிறுவன் ரித்திக் ஆகியோரை கார் ஓட்டு நர் மோகன்ராஜ் என்பவன் கடத்தி படுகொலை செய்தான். இக்கொலை
வழக்கில் சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் போலீசிடம் சிக்கிய மோக ன்ராஜ் தப்பியோட முயன்றதால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டான். அவனது கூட்டாளி மனோகரன் போலீசிடம் பிடிபட்டான்.
குற்றவாளி என தீர்ப்பு
கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் மொத்தம் 46 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில் 9 பேரிடம் மறு குறுக்கு விசாரணை நடைபெற்றது. எதிர்தரப்பில் 6 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அரசு தரப்பு வாதம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் எதிர்தரப்பு வாதம் கடந்த 22-ந் தேதி நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த திங்கள்கிழமையன்று மனோகரன் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டான். அவனுக்கு என்ன தண்டனை என்ற தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
தூக்கு தண்டனை
இதைத் தொடர்ந்து நீதிபதி சுப்பிரமணியம் இன்று அளித்த தீர்ப்பில், மனோகரனுக்கு மரண தண்டனையும் 3 ஆயுள் தண்டனையும் விதிப்பதாகக் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக