அமெரிக்காவில் பெரும் அனர்த்தங்களை கிளப்பிவி ட்ட சான்டி புயல் இதுவரை 67 பேர்களுடைய உயிர்க ளை காவு கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பலர் பெற்றோராக இருப்பதால் பல பிள்ளைகள் அநாதைகளாக வேண்டிய அவலமும் ஏ ற்பட்டுள்ளது, 11, 14 வயதுடைய இரண்டு பிள்ளைக ளின் தாயும், தந்தையும் கார் மீது மரம் முறிந்து விழு ந்ததில் மரணித்துவிட்டார்கள், இப்படி சான்டி புயல் ஆடியுள்ள அவல நாடகங்கள்
பல.மேலும் பெரும் தாக்கங்களை சந்தித்த நியூயேர்சிக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேரடி யாக விஜயம் செய்து அங்கு கச்சிதமாக பணியாற்றிய கவர்னர் கிறிஸ்டியை பெரிதும் புகழ்ந்தார்.
பல.மேலும் பெரும் தாக்கங்களை சந்தித்த நியூயேர்சிக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேரடி யாக விஜயம் செய்து அங்கு கச்சிதமாக பணியாற்றிய கவர்னர் கிறிஸ்டியை பெரிதும் புகழ்ந்தார்.
கவர்னர் கிறிஸ்டி ஒபாமாவின் டெமக்கிரட் கட்சியை சேர்ந்தவரல்ல றிப்பப்ளிக்கன் கட்சியை சேர்ந்த அவர் ஒபாமா மீது பலத்த விமர்சனங்களை முன் வைத்தவர்.
இந்த நிலையில் நியூயேர்சி சென்ற ஒபாமா அவரை புகழ்ந்துள்ளமை ஒரு வகையில் வஞ்சப் புகழ்ச்சியாகவே இருக்கிறது.
ஆனாலும் நியூயேர்சியில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை காரணம் காட்டி அதிபர் தேர்தலில் மிற் றொம்னிக்கு வாக்களிக்கும்படி தாம் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று கிறிஸ்டி கூறியுள்ளார்.
நியூயோர்சியை நேற்று சூறாவளிக்கண் கடந்தபோது சுமார் 2,4 மில்லியன் மக்கள் இருளில் கிடந்தார்கள்.
இந்தப் புயல் அமெரிக்க பொருளாதாரத்தின் வயிற்றில் பயங்கரமான குத்து குத்தியுள்ளதாக தெரிவிக்கும் பொருளியல் நிபுணர்கள் சுமார் 25 பில்லியாட் டாலர்கள் முதல் கட்ட பொருளாதார பின்னடைவு என்கிறார்கள், ஆனால் மதிப்பீடு வெளி வந்தால் இந்தத் தொகை பலத்த அச்சமூட்டும் என்பது தெரிந்ததே.
அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையங்களான நியூயோர்க் சிற்றி உட்பட ஒரு சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் ஜோன் எப் கெனடி விமான நிலையம், நியூயோர்க் லிபேட்டி போன்றன இன்னமும் திறக்கப்படவில்லை.
ஆங்காங்கு கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடப்பதாகவும், வாகனங்கள் ஓட ஆரம்பித்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக