தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.10.12

துருக்கியில் தரை இரக்கப்பட்ட சிரியா விமானத்தில் ஆயுதங்கள்


கடந்த புதன் கிழமை ரஸ்யாவில் இருந்து புறப்பட்டு சிரியா நோக்கி சென்ற சிரியாவிற்கு சொந்தமான ஏ 320 எயாபஸ் விமானத்தை துருக்கியின் எப்.16 போர் விமானங்கள் பலவந்தமாக திசை திருப்பி துருக்கி தலைநகர் அங்காராவில் இறக்கியது தெரிந்ததே.வெ றும் 35 பயணிகளுடன் வந்த இந்த விமானத்தில் ரஸ் யாவிடமிருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதாக துருக்கி அறிவித்துள்ளது.துருக்கியி ன் இந்த அறிவித்தல் வாய்பு
ழுத்த பொய் என்று சிரிய போக்குவரத்து அமைச்சர் மகுமுட் செய்யட் தெரிவித்துள்ளதாக லிபிய செய்திதாபனம் அல் மனார் சற்று முன் தெரிவித்துள்ளது.அதற்கு பதிலடியாக சிரிய எல்லைப்பகுதியில் இருந்து சரமாரியான கிரனைட் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது.துருக்கியின் எ லலை ப் பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்தக் கிரனைட்டுக்கள் விழுந்து வெடித்துள்ளன.
இதைத் தொடர்ந்து துருக்கியின் கவச வாகனங்கள், எப் 16 விமானங்கள் எல்லைப் பகுதிக்கு விரைந்துள்ளன.
இரு தரப்பும் மோதலுக்கு போவதற்கான சன்னத ஏற்றத்தில் கடந்த ஐந்து தினங்களாக பிடாரி ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பதாக மேலைத்தேய செய்திகள் தெரிவிக்கின்றன.
மறுபுறும் சிரியாவின் இட்லிப் நகரத்தில் நேற்று நடைபெற்ற சண்டையில் சிரிய படையில் 89 பேர் கொல்லப்பட்டனர், ஒரே நாளில் ஆஸாட் படைகள் சந்தித்த பாரிய இழப்பு இதுவாகும்.
நேற்று மட்டும் சிரிய மண்ணில் 200 சடலங்கள் விழுந்துள்ளன, இந்த நிலையில் துருக்கியும் சிரியாவிற்குள் நுழைந்து போரிட்டால் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகிவிடும் என்பது தெரிந்ததே.
மறுபுறம் சிரியாவிற்குள் மறைந்திருந்து அத்தனை கபட வேலைகளையும் ஈரான் செய்து கொண்டிருக்கிறது, மகாபாரதக் கதையில் வரும் சகுனி காந்தார தேசத்தில் இருந்து வந்தவனே, (காந்தார தேசமே ஈரானாகும் – சகுனியின் தமக்கை காந்தாரியும் ஈரானை சேர்ந்தவளே) அதுபோல காந்தார தேசம் தற்போது துரியோதனன் பாத்திரம் எடுத்துள்ள ஆஸாட்டுக்கு கெடுமதி கூறிவருவதாக மேலை நாடுகள் எச்சரிக்கின்றன.
ஏற்கெனவே ஈரானுக்கு எதிராக பொருளாதார தடையை ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தி முடித்துவிட்டது, இதற்கமைவாக ஈரானில் இருந்து பொருட்களை இறக்குவது, ஏற்றுவதி ஆகிய பணிகளை தாமும் நிறுத்துவதாக டென்மார்க்கின் கப்பற் துறையான மாஸ்க் நேற்று அறிவித்துள்ளது.
ஈரான் – ஆஸாட் – ஹிஸ்புல்லா ஒருபுறம் துருக்கி, இஸ்ரேல், நேட்டோ மறுபுறம் இருதரப்பு போர் மேகங்களும் மூட்டமடைந்து வருகின்றன.

0 கருத்துகள்: