குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கு வதில் இனி சிக்கல் இல்லை என அமெரிக்காவும் ம றைமுகமாக தெரிவித்துள்ளது 2002 குஜராத் கலவர ம் முன்கூட்டியே திட்டமிட்டு வழிநடத்தப்பட்டது எ னும் குற்றச்சாட்டின் கீழ், அப்போது ஆட்சியாளராக இருந்த நரேந்திர மோடியை பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மே லாக புறக்கணித்து வந்தது.இந்நிலையில், பிரிட்டன் - குஜராத் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில்
இந்தியாவுக்கான பிரித்தானிய தூதுவர் நேரடியாக குஜராத் சென்று மோடியை சந்திப்பார் என நேற்று பிரித்தானிய அரசு சார்பில் திடீர் அறிவிப்பு வெளியாகியது.
இந்தியாவுக்கான பிரித்தானிய தூதுவர் நேரடியாக குஜராத் சென்று மோடியை சந்திப்பார் என நேற்று பிரித்தானிய அரசு சார்பில் திடீர் அறிவிப்பு வெளியாகியது.
குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் பிரித்தானியாவின் இந்த அறிவிப்பு மோடிக்கு மகிழ்ச்சியையும், காங்கிரஸுக்கு கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு நுழைவதற்கு மோடிக்கு இருந்து வந்த விசா தடையும் இனி தளர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகி றது. இது தொடர்பில் அமெரிக்க பொது விவகாரங்களுக்கான அமைச்சர் மைக் ஹாமர் கூறுகையில், அமெரிக்க குடியேற்ற சட்டதிட்டப்படி, தகுதி, திறமை, நன்னடத்தை உடைய எந்தவொரு இந்தியருக்கும் விசா வழங்குவதில் தடையில்லை. இது தொடர்பில் அவர்கள் விண்ணப்பித்தால் விசா வழங்குவ து உறுதி என தெரிவித்துள்ளது. இதனால் மோடி விண்ணப்பித்தால் அவரும் அமெரிக்கா செல்ல விசா கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக