அதேவேளை இந்தப் பரிசு ஐ.நாவுக்கு விழுந்த சவுக் கடியாகவும் உள்ளது…இந்த ஆண்டு சமாதானத்திற் கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழ ங்கப்படுவதாக நோபல் பரிசுக்குழு அறிவித்துள்ளது .கடந்த அறுபது ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியம் உலக சமாதானத்திற்கான முயற்சிகளை எடுத்து வ ருவதைப் பாராட்டி இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக கருங்காலி நாடு களான குறேசியா, சேர்பியா போன்றவற்றையும் த ம்முடன் இணைக்க ஐரோ
ப்பிய ஒன்றியம் பாடுபட்டு வருவது ஒற்றுமைக்கா ன பாரிய முயற்சி அதுவே இந்தப் பரிசுக்கான சிறப்பு முத்திரை என்று பரிசுக்கு ழு தலைவர் தோபியான் ஜக்லன்ட் கூறினார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியமானது எதிர் காலத்தில் போர் நடக்காத ஒரு கண்டமாக ஐரோப்பா மாறுவதற்கான தனது காத்திரமான பணிகளை செய்துள்ளது.
அதேநேரம் அங்கத்துவ நாடுகளில் மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் என்பதில் உறுதியான முன்னெடுப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் செலுத்தியுள்ளது.
மறுபுறம் ஐரோப்பா முழுவதும் பெரும் பொருளாதார நெருக்கடி வந்தபோது அதை சீர்செய்ய பல காத்திரமான பங்களிப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.
முதலாவது – இரண்டாவது உலக மகாயுத்தங்கள் உட்பட சுமார் 70 வருட காலப்பகுதியில் பிரான்ஸ் – ஜேர்மனி ஆகிய இரண்டு நாடுகளும் மூன்று பெரும் யுத்தங்களை நடாத்தியுள்ளன, ஆனால் இன்றோ நிலமை மாறிவிட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே இனியொரு யுத்தம் வருமென்பது கனவிலும் நினைக்க முடியாத காரியமாகிவிட்டது, அந்த அபாயமற்ற நிலையை உருவாக்கியது ஐரோப்பிய ஒன்றியமே.
கிழக்கு – மேற்கு ஜேர்மனியை பிரித்த பேர்ளின் சுவரை உடைத்தது ஐரோப்பா உலகத்திற்கு காட்டிய சமாதாச சாதனை உலகிற்கு முன்னுதாரணம்.
27 நாடுகளும் வீசா இல்லாமல் கடவைகளை திறந்துவிட்டு, வரியை நீக்கி ஒரு கண்டத்தின் ஒற்றுமைக்கு வழி வகுத்தது போரற்ற கண்டத்தை உருவாக்கியது ஒன்றே உலகம் என்ற கொள்கைக்கான நடைமுறை முயற்சியாகும்.
அதேவேளை இந்தப் பரிசு ஐ.நாவுக்கு விழுந்த சவுக்கடியாகவும் உள்ளது.
சிறீலங்காவில் நடந்த மானிடப் படுகொலை உட்பட பல்வேறு நாடுகளில் மானிடப் கொலைகளை அங்கீகரித்த ஐ.நா சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதியற்ற ஒன்று என்ற செய்தியை இப்பரிசு பான் கி மூனுக்கு உணர்த்தாமல் உணர்த்தியுள்ளது.
ஈராக் போருக்குள் நுழைந்த அமெரிக்காவிற்கும், கூடப்போன பிரிட்டனுக்கும் இன்னொரு சவுக்கடியாகவும் உள்ளது.
அதேவேளை ஐரோப்பிய நாடுகளும் போருக்கு போயிருந்தாலும் முதலாவதாக அதை முன்னெடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இனி தென்னாசியாவில் தான் என்ன செய்கிறேன் என்பதை இந்தியா போன்ற நாடுகள் சிந்திக்க வேண்டிய நிலையையும் இந்தப் பரிசு உருவாக்கியுள்ளது.
ஆசியாவின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கம் கருங்காலி நாடான சீனாவுக்கும் இது ஓர் அடியாகவே இருக்கும்.
நோபல் பரிசுக் கமிட்டி இந்த முடிவை ஏகமனதாக எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக