வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள சந்தைப் பகுதியி ல் கழுதை ஒன்றின் முதுகில் பொதியை வைத்து அ னுப்பியுள்ளனர்.பொதிக்குள் இருந்த குண்டு குறித்த நேரத்தில் குண்டு வெடித்ததில் அருகில் நின்ற நால் வர் மரணமடைந்து, பத்துப்பேர் படுகாயமடைந்தார் கள்.பொது மக்கள் நடமாடும் சந்தைப் பகுதியில் இல க்கு எதுவும் இல்லாமல் வெறும் வரட்டுத்தனமான உயிர் சேதத்தை மட்டும் குறியாக வைத்து நாசகார செயலை செய்த மனிதக் கழுதைகள் இன்னமும் அ டையாளம் காணப்படவில்
லை.இது இவ்விதமிருக்க சிரியாவிற்கு லெபனானி ல் இருந்து ஹிஸ்புல்லாவின் படைகள் அனுப்பப்பட்டதாக எழுந்த குற்றச்சாட் டை ஹிஸ்புல்லா மறுத்துள்ளார்.
அமெரிக்க சிரியாவிற்கு எதிராக தடைகளை விதித்தபோது வெகுண்டெழுந்த ஹிஸ்புல்லா அதற்கு பதலடியாக தனது போராளிகளை ஆஸாட்டுக்கு ஆதரவாக போரிட சிரியாவிற்குள் அனுப்பியதாகக் கூறப்பட்டது.
ஆனால் அப்படியொரு செயலை தாம் செய்யவில்லை என்றும், ஆஸாட் உதவி கேட்டாலும் தமக்கு அதில் யாதொரு ஆர்வமும் இருக்கவில்லை என்று இன்று ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நடைபெறும் போர் லெபனானில் எரிந்தால் அதைப்போல ஆபத்து வேறெதுவும் கிடையாது என்று ஐ.நா செயலர் தொடை நடுங்கியிருப்பதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் கருத்து வெளியாகியுள்ளது.
அதேவேளை சிரியாவில் நடைபெறும் பிரச்சனையில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மதில் மேல் பூனையாக இருக்கும் பராக் ஒபாமா தேர்தலில் வெற்றி பெறுவது பெரும் சந்தேகமாகி வருகிறது.
ஒபாமாவுக்கு எதிராக சூல் கொண்ட மேகமாக மாறிவரும் கருத்துக் கணிப்பை மாற்ற அவர் உருப்படியாக எதையாவது செய்யாவிட்டால் கைக்குட்டையுடன் மோதிரத்தையும் சேர்த்து கழற்றி வீசியதைப் போல தனது அடுத்த கட்ட அதிபர் பதவியை பறிகொடுக்க நேரிடும் என்று டேனிஸ் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தொலைக்காட்சி விவாதத்தை கண்டதும் ஒபாமா நடு நடுங்கி திகைப்படைந்து நின்ற காட்சி அவருடைய ஆளுமைக்கு பெரும் சவாலாகியிருக்கிறது.
நேற்று உப அதிபர் வேட்பாளர் இருவரும் தொலைக்காட்சி மோதலில் ஈடுபட்டார்கள், அதிலும் ஒபாமா தரப்பிற்கு பாரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
வரும் செவ்வாய் அடுத்த தொலைக்காட்சி விவாதம் நடைபெறவுள்ளது, அதில் பட்டிமன்றம் போல விவாதிக்காவிட்டாலும் லியோனிபோல பாட்டு மன்றம் நடாத்தியாவது வெற்றி பெறாவிட்டால் பாகிஸ்தானில் கழுதையில் குண்டு வந்த கதை போல தோல்வி கழுதைக்குண்டு போல வந்துவிடும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக