தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.10.12

சிரியா துருக்கி கிரனைட் தாக்குதல் மிகவும் ஆபத்தானது ஐ.நா கவலை


கடந்த ஆறு தினங்களாக துருக்கியில் இருந்து சிரி யா நோக்கியும், மறுபுறம் சிரியாவில் இருந்து துருக் கி நோக்கியும் கிரனைட் மோட்டார் தாக்குதல்கள் நடைபெற்றவண்ணமுள்ளன.படிப்படியாக இதன் எ ண்ணிக்கை அதிகரித்து வருவது இந்தப் பிராந்தியத் தையே ஒட்டு மொத்தமாக பற்ற வைத்துவிடும் ஆப த்து கொண்டது என்று ஐ.நா செயலர் கவலை வெளி யிட்டுள்ளார்.இரண்டு நாடுகளும் மோதலை நடாத்து வது லெபனானில் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று கலக்கத்தை ஐ.நா செயலர் வெளியிட்டுள்ளார்.கார ணம் மிக மோசமான உணர்
வுபூர்வமான நாடு லெபனான், அங்கு ஹிஸ்புல்லா வின் ஆதிக்கம் நிலவுகிறது, சியா முஸ்லீமான அவர் தனது இனமான சியா முஸ்லீம் தலைவர் ஆஸாட்டுக்கு துணையாக களமிறங்கக் கூடிய அபாயம் இருக்கிறது.
நிலமைகளை தப்பாக விளங்கிக் கொண்டு லெபனான் களமிறங்கினால் சூல் கொண்ட மேகமாக நிலமை மோதிச் சிதறிவிடும்.
இஸ்ரேல், ஈரான் என்று அந்த சுற்று வட்டகையே குடுமிகளை பிடித்து இழுத்து பெரும் சிக்கலை உருவாக்கி, உலகப் போருக்குள் வீழ்த்திவிடும் அபாயம் தெரிகிறது என்பதே ஐ.நா செயலரின் பதட்டமாகும்.
இது இவ்விதமிருக்க துருக்கிய அதிபர் அப்துல்லா கூல் உலக நாடுகளுக்கு அவசர வேண்டுதலை விடுத்துள்ளார்.
கடந்த ஆறு நாட்களாக நடைபெறும் தாக்குதல்களை நிறுத்த சிரியாவுடன் பேச்சுக்களை நடாத்தி யாதொரு பயனும் விளையவில்லை என்று தெரிவித்த அவர் அங்கு நிலமை கட்டுமீறிப் போய்விட்டதாக கூறுகிறார்.
சர்வதேச நாடுகள் தலையிட்டு இந்த விவகாரத்தை தீர்க்க வேண்டுமென உருக்கமான வேண்டுதல் விடுத்துள்ளார்.
ஆனால் சிரிய விடயத்தில் அமெரிக்கா, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை தலையிட மறுத்து வருகின்றன.
அதற்குள் பொதிந்து கிடக்கும் ஆபத்து மீள முடியாத சிக்கலில் உலகத்தை தள்ளிவிடும் என்ற அச்சம் அவர்களை எட்டவாக நிற்பாட்டி வைத்துள்ளது.
நிலமை நிமிடத்திற்கு நிமிடம் திசை மாறி வருகிறது.

0 கருத்துகள்: