தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.10.12

வெனிசியூலா தேர்தல் கூகோ ஸவாஸ் வெற்றி


எண்ணெய் வளமிக்க வெனிசியூலா நாட்டின் அதிபர் தேர்தலில் அந்நாட்டில் 14 வருடங்களாக ஆட்சிக்க ட்டிலில் இருந்து இறக்க முடியாத கூகோ ஸவாஸ் மறுபடியும் வெற்றி பெற்றார்.அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 54 வீதம் பெற்று வெற்றி பெற்றார், இவ ரை எதிர்த்துப் போட்டியிட்ட கென்ரிக் கப்பிரியேல் 45 வீதமான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். இவர் தோல்வியை ஏற்றுக் கொண்டு வெற்றிபெற்ற கூகோ ஸவாசை வாழ்த்தி விடை பெற்றார், இவரு டைய இச்செயல் தேர்தல் தொடர்பாக மேலை நாடு களில் பரவ இருந்த எதிர்ப்
பிரச்சாரங்களுக்கு ஆப்பு வைத்துவிட்டது.
நேற்று வெளியான வெளியான மேலை நாட்டு செய்திகள் கூகோ ஸவாஸ் தோல்வியை தழுவலாம் என்பது போன்ற பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தன, ஆனால் அவை சபையேறவில்லை.
58 வயதான ஸவாஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, கியூபாவில் சிகிச்சை எடுத்து நாடு திரும்பிய பின்னர் தேர்தலில் வென்றுள்ளார்.
அடுத்து வரும் ஆறு ஆண்டுகளுக்கு இவரே ஆட்சியில் தொடர்வார்.
முன்னர் ஒரு தடவை தனக்கு புற்று நோயை ஏற்படுத்தும் முயற்சியின் பின்னணியில் செயற்பட்டது அமெரிக்காவே என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இவருடைய குற்றச் சாட்டுக்கு அமெரிக்கா பதில் எதுவும் கூறவில்லை.
அமெரிக்க எதிர்ப்பாளராக உலகில் எஞ்சியிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய தலைவர்களில் இவரும் ஒருவராகும்.
கூகோ ஸவாஸ் எவ்வளவுதான் சமாதானம் கூறினாலும் புற்றுநோயின் தாக்கம் இவரை வெகுவாகப் பாதித்துள்ளது என்பதை இவருடைய உடல் காண்பிக்கிறது.

0 கருத்துகள்: