தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.10.12

ஹிட்லரின் மகளே இங்கே வராதே.. கிரேக்கத்தில் ஆர்பாட்டம்


கிரேக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆர்பாட்டம் ஜேர் மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலுக்கு எதிராகத் திரும்பியது.கிரேக்கப் பாராளுமன்றத்திற்கு முன்னா ல் உள்ள சுன்ராக்மா சதுக்கத்தில் கூடிய சுமார் 5000 முதல் 8000 பேர் கொண்ட ஆர்பாட்டக்காரர் ஐரோப்பி ய ஒன்றியத்தின் கொடியை தீயிட்டு கொழுத்தினார் கள்.கிரேக்கத்தின் மீது கடுமையானநிபந்தனைகளை விதிக்க வேண்டுமெனக் கூறிவரும் ஜேர்மனிய சா ன்சிலர் அஞ்சலா மேர்க்கலை சர்வாதிகாரி ஹிட்லர் பெற்ற மகளே இந்த நாட்டு
மண்ணில் மிதிக்காதே..! என்று கோஷமிட்டார்கள்.
கிரேக்கப் போலீசார் தலைநகர் அதென்ஸ்சின் அமைதியை காப்பதற்காக பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள், 1999 ம் ஆண்டு பில் கிளின்டன் வந்தபோது ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு போல ஒரு பாதுகாப்பு வளையத்தை போட இருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிரேக்கம் பெற்ற கடனை திருப்பிக் கட்டவேண்டுமானால் கடுமையான மீதம் பிடித்தல்களை செய்ய வேண்டும்.
பொதுத்துறையில் வழங்கப்படும் சலுகைகளை குறைக்க வேண்டும் என்று அஞ்சலா மேர்க்கல் வலியுறுத்த, அதை அரசியல் கட்சிகள் நிறைவேற்றத் தொடங்க மக்கள் கோபம் திசை திரும்பியுள்ளது.
சும்மா கிடந்த கிரேக்கம் யூரோ நாணயத்திற்குள் போய் பொருளியல் வங்குரோத்தானதற்கு ஐரோப்பிய ஒன்றியமே காரணம் என்ற கருத்து அங்கு பரவி வருகிறது.
ஒரு கட்டத்தில் கிரேக்கம் யூரோ நாணயத்தையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் புறந்தள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற ஆர்பாட்டங்கள் அந்த இடத்திற்குள் கிரேக்கத்தை நகர்த்தும் முதல் விசையாக உள்ளன.
அஞ்சலா மேர்க்கல் முதல் தடவையாக சர்வாதிகாரி ஹிட்லர் மகளாக வர்ணிக்கப்பட்டிருப்பது ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடையே பலத்த கிலியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் கோபம் கொண்ட மக்கள் அஞ்சலா மேர்க்கலுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எதிராக திரும்பியிருப்பது நாடு அடுத்தகட்ட நெருக்கடிக்குள் நுழையப்போவதைக் காட்டுகிறது.
ஆகவேதான் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய ஆர்பாட்டங்களை அடக்க கிரேக்க போலீசார் தயாராகி வருகிறார்கள்.

0 கருத்துகள்: