ஜனாதிபதியை அழைக்கும் முறையில் வெள்ளைய ர் கால மரபுகளை கைவிடுவதற்கு ஜனாதிபதி பிர ணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளார்.அதன் படி ஜனா திபதி மற்றும் ஆளுனர் உள்ளிட்ட உயர் பதவி வகிப் போரை அழைக்கும் போது மேதகு எனும் வார்த்தை கைவிடப்படுகிறது. மேலும் உள்நாட்டு நிகழ்ச்சிகளி ல், உள்நாட்டு தலைவர்களுடனான சந்திப்புக்களின் போதும் இந்த வார்த்தை பயன்படுத்துவது நிறுத்தப்ப டுகிறது. எனினும் இது சர்வ
தேச சம்பிரதாய வார்த்தையாக தொடர்ந்து இருப்ப தால், வெளிநாட்டு தலைவர்களுடனான சதிப்பின் போது மட்டும் அதை பயன் படுத்திக்கொள்ளும் முறை நீடிக்கிறது.இம் முடிவுகள், மேல்நடவடிக்கைக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தையும், போலீசாருக்கு ஏற்படும் சுமையையும் குறைப்பதற்காக, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கூடுமானவரை ஜனாதிபதி மாளிகையிலேயே நடத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக