தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.10.12

கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்: முதல்வர் அறிவிப்பு


உச்ச நீதி மன்ற உத்தரவின் காரணமாக வழங்கி வந் த தண்ணீரை கர்நாடக அரசு எவ்வித அறிவிப்புமின் றி நிறுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பாக ஆலோ சிக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்குப் பின், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பி ல்,உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக 29-09-2012 முதல் தண்ணீரைத் தரத் துவங்கிய கர்நாடக அரசு 8-10-2012 முதல் எவ்வித அறிவிப்புமின்றி தன் னிச்சையாக நிறுத்தியுள்ளது. இச்சூழ்நிலையில், முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக்
கூட்டத்தில் இந்திய கூட்டாட்சித்தத்துவத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை அவமதிக்கும் வகையிலும் தமிழகத்திற்கு தந்து கொண்டிருந்த தண்ணீரை நிறுத்தியுள்ளதால், கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து தமிழகத்திற்கான பங்கினை உடனடியாக பெற முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். எனவே, உடனடியாக கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: