தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.10.12

குஜராத் இனப்படுகொலை குடியரசின் மீது விழுந்த மிகப் பெரிய அடி! – ரொமிலா தாப்பர்


புதுடெல்லி : ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் எம்.எஃப். ஹுசைன் ஆர்ட் காலரியில் நடந்த கருத்தரங்கில் பிரபல வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பரும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த இந்த கருத்தரங்கில் இடதுசாரி சிந்தனையுள்ள பிரபல வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர் தனது
சிறப்புரையில் கூறியதாவது: “2002 குஜராத் இனப்படுகொலையானது மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் குடியரசின் மீது விழுந்த மிகப் பெரிய அடி. அது மதக் கலவரமல்ல. ஓர் இனத்தையே அழிப்பதற்காக நடத்தப்பட்ட இனப்படுகொலை. இது நடந்து 10 வருடங்களாக நரேந்திர மோடி அரசு குஜராத்தை வளர்ச்சியை நோக்கிச் செல்லும் மாநிலமாக முன்னிறுத்து பல முயற்சிகளைச் செய்து வருகின்றது. உண்மையிலேயே வளர்ச்சி என்றால் ஏன் இனப் படுகொலையின் பொழுது கைது செய்யப்பட்ட அப்பாவிகள் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்? பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் இன்னும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை? காணாமல் போனவர்களின் நிலை என்ன? மோடியின் குஜராத் ஒரு மதச்சார்பற்ற மாநிலமே அல்ல. அவரது நிர்வாக முறை இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்திற்கே எதிரானது.” என்றார்.

0 கருத்துகள்: