தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.10.12

ரயில் கட்டணம் உயர்த்தும் அவசியம் வந்தால் உயர்த்தப்படும் : பவன் குமார்


ரயில் கட்டணம் உயர்த்தும் அவசியம் வந்தால் உயர்த் தப்படுமென புதிய ரயில்வே அமைச்சரான பவன் குமா ர் தெரிவித்துள்ளார்.நேற்று மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய ராயில்வே அ மைச்சராக பவன்குமார் பன்சால்  நியமிக்கப்பட்டார். இ துவரை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த பவன்குமார் ரயில்வே அமைச்சராக பெறுப்பே ற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
ரயில்
கட்டணம் உயர்த்த வேண்டி அவசியம் வந்தால் அ தில் எந்த தயக்கமும் இருக்காது. அதேவேளை பயணிகளுக்கு நியாயமான கட் டண மாகத்தான் அமையும் எனவும் தெரிவித்துள்ளதோடு இதன் மூலம் பயணி களுக்கு சிறந்த சேவைகள் அளிக்க முடியும் என்பதாலேயே உயர்த்தப்படுவதா கவும் தெரிவித்தார்.

இதனிடையே இத்துறையில் இருக்கும் சவால்களை நன்கு அறிந்துள்ளதாகவும், ரயில் பயணிகளின் பாதுகாப்பு, ரயில் நிலையங்களில் தூய்மை போன்றவைகளில் அக்கறை செலுத்தப்படுமென பவன் குமார் மேலும் கூறினார்.

0 கருத்துகள்: