தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.10.12

தாய்லாந்து அழகுக்கலை நிபுணரிடம் ரூ.20,000 கொடுத்து முகத்தில் அறைவாங்கும் அமெரிக்க மக்கள்.


முகத்தில் அறைந்து, அழகு படுத்தும் தாய்லாந்து நாட்டு சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அமெரிக்காவின், சான்பிரான் சிஸ்கோ நகரில், அழகு நிலையம் நடத்தி வருபவர் தாய்லாந்தை சேர்ந்த அகா டாடா. முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்குவதற்காக, கன்னத்தில் அறையும் சிகிச்சையை இவர் அளித்து வருகிறார்.இ தற்காக, இவர், 20 ஆயிரம்
ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்.இது குறித்து டாடா கூறியதாவது:நான் அளிக்கும் சிகிச்சையில், ரசாயன கலப்பு ஏதும் இல்லாததால், பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது. பாங்காக்கில் உள்ள, பிரபல அழகு கலை நிபுணரிடம், இந்த சிகிச்சையை பயின்றுள்ளேன்.ஆறு மாதத்துக்கு ஒரு முறை இந்த சிகிச்சையை எடுத்து கொண்டால், முகத்தில் சுருக்கம் இன்றி பளிச்சென இருக்கும்.
இந்த சிகிச்சையில், முகத்தில் அறையும் போது சத்தம் வருமேயொழிய பெரிய அளவில் வலி இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்: