தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.10.12

அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் முடக்கம்? வலுப்பெறும் சான்டி புயல்


அமெரிக்காவின் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமா ன கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஹரிக்கேன் சான் டி எனும் புயல் அண்மித்துள்ளது.இதையடுத்து கிழக் குக் கடற்கரைக்கு அண்மையில் புயல் சீற்றமும் வெ ள்ளப்பெருக்கும் ஏற்படும் என வானிலை அவதான நிலையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மே லும் நியூயோர்க் சிட்டி மற்றும் நியூ ஜேர்சீ ஆகிய பிர தேசங்களில் இருந்து ஆயிரக் கணக்கான
மக்களை வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் புயலினால் மொத்தமாக 50 மில்லியன் பேர் வரை பாதிக்கப்படலாம் எனக் கணிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் DC, பிலெடெல்ஃபியா, மற்றும் நியூயோர்க் ஆகிய நகரங்களில் போக்குவரத்து தடைப் பட்டுள்ளதுடன் 7000 இற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு தறையிறங்கியுள்ளன. இதைவிட இந்தப் புயல் மேற்கு மற்றும் வடக்குப் பிரதேசங்களில் காணப்படும் குளிர்மையான வானிலையுடன் தாக்கமுற்றால்  தீவிரமடைந்து ஒரு 'Super storm' ஆக மாறும் வாய்ப்பு உள்ளது என வானிலை அவதானிகள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் தற்போது நிலவும் பௌர்ணமி நிலவாலும் அலைகள் அதிக உயரத்துக்கு எழும்பி அழிவை ஏற்படுத்தக் கூடும் எனவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே சான்டி புயல் கடந்த வாரம் கரீபியன் தீவுகளைத் தாக்கியதில் 60 பேர் கொல்லப் பட்டிருந்தனர். இந்நிலையில் இந்தப் புயலின் தீவிரம் காரணமாக அமெரிக்காவில் நவம்பர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலும் பாதிக்கப் படக் கூடும் எனக் கருதப்படுகின்றது. ஏற்கனவே 'New York Stock Exchange மற்றும் Nasdaq ஆகியவை இடைநிறுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: