உலகின் அதிக உயரத்திலிருந்து குதித்த மனிதராக நேற்று மாபெரும் சாதனை ஒன்றை படைத்தார் ஸ் கைடைவர் ஃபெலிக்ஸ் பௌம்கார்ட்னர்.ரெட்புல் நி றுவனத்தின் ஸ்பான்சரில் கீழ் யூடியூப்பில் நேரடி அ லைவரிசையில் காண்பிக்கப்பட்ட இச்சாகசம் ஃபெ லிக்ஸிற்கு மற்றுமொரு புதிய உலக சாதனையையு ம் கொண்டுவந்து கொடுத்திருக்கிறது.அதாவது, உல கில் அதிகமானோர் ஒரே நேரத்தில் யூடியூப்பில் பார் வையிட்ட நேரலை நிகழ்வு, நேற்றைய பெலிக்ஸின் சாகசமே. சுமார் 8 மில்லி
யனுக்கு மேற்பட்டவர்கள் இணையத்தில் யூடியூப்பி ன் வழியாக கண்டுகளித்திருக்கிறார்கள். இதை யூடியூப் மற்றும் கூகுள் நிறுவ னங்கள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படுத்தியுள்ளன.பூமிக்கு வெளியே, கேப்சுல் முனையில் நின்று குதிக்க ஆயத்தமானதும், உலகமே என்னை பார்த்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன்' என தனது அனுபவத்த பகிர்ந்து கொண்டார் ஃபெலிக்ஸ். ஆனால் அவர் வெறுமனே உணரவில்லை. உலகம் உண்மையாகவே அவரை பார்த்துக்கொண்டிருந்தது என்பதை இச்சாதனை நிரூபித்துள்ளது.
'நான் என்ன பார்த்தேனோ அதையே இந்த உலகமும் பார்க்க வேண்டும் என பிரார்த்திக்கொண்டிருந்தேன். ஏனெனில் அது அவ்வளவு ஆச்சரியமானது' என பெலிக்ஸ் மேலும் தெரிவித்திருப்பார்.
பெலிக்ஸின் கேப்சுலில் பொருத்தப்பட்டிருந்த கமெரா, ஃபெலிக்ஸின் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்த கமெரா, இவற்றை விட பிரிட்டனின், Equivital நிறுவனம், ஃபெலிக்ஸ் குதிக்கும் போது அவரை தனது அதிதிறன் வீடியோ தொலைநோக்கி மூலமாக பின் தொடர்ந்த கமெரா இவை அனைத்தின் காட்சிகளையும் கொண்டு குறித்த நேரலை ஒளிபரப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய Skydiver ஆன பெலிக்ஸ், பாரசூட் மற்றும் கேப்சுல் விண்கலம் மூலம் தரையிலிருந்து 120,000 அடி (22 மைல், 36.5 கி.மீ) உயர வான்பரப்பிற்கு சென்று அங்கிருந்து பூமியை நோக்கி குதிக்கும் முயற்சிக்கு சமீபகாலமாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வந்தார் இன்னிலையி நேற்று முதல்நாள் இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்
நேற்று இதை காணத்தவறியிருப்பவர்கள் :
இவ்வீடியோவின் மூலம் மீண்டும் இதை காணலாம்.
தொடர்புச் செய்திகள்:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக