நைஜீரியாவின் 'கடூனா' மாநிலத்திலுள்ள 'டோகோ ன் டாவா' எனும் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் ஒ ன்றின் அருகே துப்பாக்கிதாரிகள் சிலர்மேற்கொண் ட துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப் பட்டும் 17 பேர் காயமடைந்தும் உள்ளனர். இத்தகவலை நைஜீ ரியாவின் தேசிய அவசரகால முகாமை நிறுவனத் தின் மாநில பொறுப்பாளரான 'முசா லல்லாஹ்' ஊ டகங்களுக்குத் தெரிவித்தார்.இந்தத் துப்பாக்கிச் சூட்
டு சம்பவத்துக்குப் பின்னணியில் நைஜீரியாவில் குற்றச் செயல்களில் ஈடுப டும் குழு ஒன்றுள்ளது என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நேற் றைய தினம் விடுமுறை நாள் என்பதால் காலை பள்ளிவாசலில் தொழுகை யை நிகழ்த்திய பின் பல பொது மக்கள் சந்தையில் ஒன்று கூடி இருந்த வேளையில் இவ்வசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

மேலும் குறித்த கிராமத்தைச் சுற்றி அடர்ந்த வனம் காணப் படுவதால் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி விட்டு இலகுவாகத் தப்பிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது. 'கடூனா' மாநிலம் பல வருடங்களாக கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே தீவிரமான மோதல்கள் இடம்பெற்று வரும் பிரதேசமாகும். ஜூனில் தேவாலயம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப் பட்டிருந்தனர்.
நைஜீரியாவில் இஸ்லாமிய ஆயுத குழுவான 'போக்கோ ஹராம்' நைஜீரிய அரசாங்கத்தை முழுதும் இஸ்லாமிய கொள்கைகள் அடிப்படையிலான அமைப்பாக உருவாக்க முயற்சித்து வருகின்றது. இக்குழுவே ஜூனில் இடம்பெற்ற தாக்குதலுக்கும் பொறுப்பேற்றிருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக