தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.10.12

இந்தியாவின் தேசிய செஸ் சாம்பியனான பட்டம் வென்ற 16 வயது தமிழக வீரர்


தேசிய அளவிலான செஸ் சேம்பியன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 16 வயதே ஆன ஆகாஷ், சாம்பி யன் பட்டம் வென்றுள்ளார்.கொல்கத்தாவில் கடந்த சில நாட்களாக நேஷனல் பிரிமியர் சேம்பியன்ஷிப் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இறுதி ப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 16 வயதேயான ஆகாஷ் சேம்பியன் பட்டம் வென்றுள்ளார். இவருக் கு கடந்த அக்.1ம் திகதியே 16 வயதாகியுள்ளது. இவ
ரை எதிர்த்துப் போட்டியிட்ட வெங்கடேஷை ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோ ற்கடித்து சேம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதையடுத்து ஆகாஷுக்கு ரூ 1.75 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அளவிலான போட்டியில் பட்டம் வென்றதால், அடுத்த வருடம் நார்வேயில் நடக்கவிருக்கும் உலக சேம்பியன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. விஸ்வநாதன் ஆனந்த், மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட 5 பேர் இந்த உலக அளவிலான சேம்பியன் போட்டியில் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சென்னை அசோக்நகர் ஜவகர் உயர்தர இடைநிலை பள்ளியில் 11 வது படிக்கும் ஆகாஷ் புகழ்பெற்ற நட்சச்த்திர ஆட்டக்காரர் விஸ்வநாதன் ஆனந்துடன், தான் உலக சேம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க இருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். ஆகாஷுக்கு கிரான்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதுதான் லட்சியமாம். இவர் இனி விளையாட போவது சீனியர் பிரிவு என்பதால் இந்திய அளவில் சீனியர் சாம்பியன் பிரிவில் விளையாடும் இளம்வயது காரர் எனும் பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக செஸ் வீரர் பருவா (Barua) 17 வயதில் தனது முதலாவது தேசிய பட்டத்தை வென்றிருந்தார்.

0 கருத்துகள்: