தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.9.12

பாப்பரசரின் சமையற்காரர் மீது விசாரணை

பாப்பரசரின் சமையற்காரர் மீது நேற்று வெள்ளி இத் தாலிய நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ள து. சமையற்காரராக இருந்து கொண்டே அங்கிருந்த இரகசிய ஆவணங்களை திருடி ஊடகங்களில் கசிய ச் செய்திருக்கிறார்.வத்திக்கானில் நடைபெறும் ஊழ லும், இருண்மையும் இவருடைய அறிக்கைகளால் ஊடகங்களில் கசிந்ததோடு அது குறித்த புத்தகம் ஒ ன்றும் வெளிவரக் காரணமானது.மேலும் அனைத்து ஆவணங்களும் உண்மையாக இருந்த காரணத்தால் வத்திக்கானுக்கு அது
பெரும் சங்கடத்தைக்கொடுத்த து.ஏற்கெனவே கிறீத்தவ பாதரிகள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு, மதத்திற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திய சுமையை வத்திக்கான் தூக்க முடியாமல் தவித்தபோது, இந்த இரகசியங்களும் அம்பலமாகி இரட்டைப் பாரத்தை ஏற்படுத்தியது.
இரகசியங்கள் அம்பலமானாலும், சமையற்காரர் அந்த ஆவணங்களை திருடி அம்பலப்படுத்தியது சட்டப்படி குற்றச் செயல் என்றே கருதப்படுகிறது.
சமையற்காரரின் வேலை சமைப்பதே அல்லாமல் அனுமதியற்று ஆவணங்களை திருடுவதல்ல என்ற கோணத்தில் இந்த வழக்கு நடைபெறுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சமையற்காரர் சுமார் நான்கு ஆண்டுகள் கம்பி எண்ண நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: