சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் தொடர்ந் து உச்சக் கட்டத்தில் சதுராடியபடி இருக்கிறது, நேற் று முன்தினம் வியாழன் ஆரம்பித்த சண்டைகள் நே ற்று வெள்ளியும் இடைவேளை வழங்காமல் தொடர் ந்தபடி இருக்கின்றன.பல்வேறு போராளிக்குழுக்களு ம், மோதல் தளங்களை தங்களுக்குள் சரிவரப் பிரி த்துக் கொண்டு ஆஸாட் படைகளுக்கு எதிரான பல முனைத் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. சிரிய சர்வாதிகாரி ஆங்காங்கு இரசாயன ஆயுதங்க ளை பாவிக்கிறார் என்று
முன்னர் கூறப்பட்டிருந்தது, ஆனால் இன்று அமெரிக் க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனீற்றா வெளியிட்டுள்ள தகவல் அதற்கு மாறுபாடக இருக்கிறது.
சிரிய படைகள் தமது இரசாயன ஆயுதங்களை மிகவும் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்த்த ஆரம்பித்துள்ளதாக அவர் சி.ஐ.ஏ உளவு அறிக்கையை ஆதாரம் காட்டி தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் தற்போது இரசாயன ஆயுதங்கள் இருக்கும் சிரியப் படைகளின் பாதுகாப்பான இடம் எது என்பதை அவர் அறிவிக்கவில்லை.
அதேவேளை சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அமெரிக்கா கண்காணித்து வருகிறது என்ற உண்மை இதன் மூலம் அம்பலமாகியுள்ளது, ஏற்கெனவே போராளிகளுக்கு சிரிய படைகளின் நகர்வை சற்லைற் மூலம் அவதானித்து அமெரிக்கா தகவல் வழங்குவதாக கூறப்படுகிறது.
அந்தச் சந்தேகம் மேலும் ஊர்ஜிதமாகியுள்ளது, இந்தப் போரில் சி.ஐ.ஏ மிக முக்கிய பாத்திரம் வகிப்பதையும் அவருடைய தகவல் வெளிப்படுத்தியுள்ளது.
நிதர்சனமாக சிரியாவின் அதிபரை தோற்கடிக்க ஒரு சதுரங்கப் பலகை விளையாட்டு நடைபெறுவதையும், அதில் ரஸ்யா – அமெரிக்கா எதிரெதிராக இருந்து காய்களை நகர்த்துவதையும் உணர முடிகிறது.
கடந்த 48 மணி நேரமாக சிரியாவின் அலிப்போ நகரத்தின் வடபுலத்தில் ஓய்வற்ற மோதல் நடைபெறுவதால் மக்கள் சிதறி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
துருக்கியில் இருந்து சிரியா செல்லும் மூன்றாவது முக்கிய காவற் கடவை போராளிகள் கைகளில் வீழ்ந்துவிட்டதால் துருக்கியில் இருந்து உணவு, ஆயுத வழங்கள் சீராக நடைபெறுவாதல் இந்த ஓய்வற்ற மோதல் நடைபெறுகிறது.
போராளிகள் புத்தெழுச்சி பெறும் காரணத்தினால் சிரிய படைகள் திணறி வருகின்றன.
தமது இரசாயன ஆயுதங்கள் பறி போய்விடுமென்று அஞ்சி அவற்றை நகர்த்துமளவுக்கு சிரிய படைகளின் பின்னடைவு காணப்படுகிறது.
தொடர்கிறது மோதல்…
0 கருத்துகள்:
கருத்துரையிடுக