கடந்த 2003 ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிராக அமெரிக் கா ஆரம்பித்த போரை தவிர்க்கலாம் என்ற யோச னையை பிரிட்டன் பிரதமர் பிளேயர் அமெரிக்க அதி பர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சிடம் தெரிவித்துள்ளார்.த டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய முன்னாள் ஐ.நா செயலர் கொபி அனான் இந்தத் தகவலைவெளி யிட்டுள்ளார்.மேலும் அன்றைய நிலையில் கெடுகு டி சொற்கேளாது என்ற பழமொழிக்கு அமைவாக எதி ர்க்கருத்து தெரிவித்த நாடுகளை எல்லாம் அமெரிக் கா துரோகிகளாக வர்ணித்துக் கொண்டிருந்தபோது, பிளேயர் சற்று வித்தியாசமாக
செயற்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
செயற்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்று புஸ்சிற்கு நட்புக்காரணமாக புத்தி சொல்லக்கூடிய தகுதியும் உரிமையும் டோனி பிளேயருக்கு இருந்தது, அதை அடிப்படையாக வைத்து புஸ்சிற்கு பிளேயர் யோசனை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
போரைத் தவிர்க்கலாம் என்று யோசனை சொல்லி, அது முடியாத பட்சத்தில் அமெரிக்காவை தனி வழியில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கருதி பிளேயர் பிரிட்டன் படைகளையும் ஈராக் அனுப்பினார்.
2002 ம் ஆண்டு ஐ.நா பாதுகாப்பு சபையில் எடுக்கப்பட்ட தீhத்மானம் ஈராக்கிற்குள் படையெடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தி சொல்லியிருந்தது, ஆனால் ஐ.நாவையும் உதறிவிட்டு அமெரிக்க அணி 2003 ம் ஆண்டு மார்ச் 20 ம் திகதி ; ஈராக்கிற்குள் களமிறங்கியது.
சுமார் எட்டு ஆண்டு காலம் நடைபெற்ற போரில் ஒரு லட்சம் பொது மக்களை கொன்ற கூட்டுப்படைகள் ஈராக்கில் அணு ஆயுதங்கள் எதையும் கண்டு பிடிக்காது ஏமாற்றத்துடன் வெளியேறின.
கொபி அனான் கூறுவது போல உண்மையாகவே டோனி பிளேயர் போரைத் தடுத்திருந்தால் அவர் போருக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் போலியானவை என்பது இயல்பாகவே சாயம் வெளிறி அம்பலமாவது தவிர்க்க இயலாததே.
மேலும் ஈராக்கில் அணு, உயிரியல் ஆயுதங்கள் இருக்கின்றன என்று இவர் முழங்கியதும் அப்பட்டமான பொய்யாக மாறிவிடுகிறது.
ஆக பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு பொய்யுரைத்து, அந்த நாட்டின் படைகளை தேவையற்ற முறையில் ஈராக்கிற்குள் நுழைத்து, உலகப் பொருளாதாரத்தை டபிள் டிப் எனப்படும் பாதாளத்திற்குள் விழுத்திய குற்றத்தின் நிழல் இவர் மீது படியக் காணலாம்.
ரொனி பிளேயர் மீது இது குறித்த சுயாதீன விசாரணை ஏற்கெனவே நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனானின் ரைம்ஸ் கருத்து பிளேயரின் முதுகில் விழுந்த பாரிய இறுக்காகவே உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக