தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.9.12

நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி.


நேபாளத்தில், நேற்று காலை ஏற்பட்ட விமான விபத்தில், பிரிட்டனின் மலையேறும் குழுவை சேர்ந்த ஏழு பேர், உட்பட, 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நேபாள தலைநகர் காத்மாண்டுவில், திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான விமானம், லுக்லா பகுதியை நோக்கி நேற்று காலை, புறப்பட்டது. விமானத்தில் இருந்த மலையேறும் குழுவினர்,

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், விமானம் புறப்பட்டு இரண்டு நிமிடத்திலேயே, திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. விமான நிலையத்துக்கு தெற்கே, 3 கி.மீ., தொலைவில் உள்ள, கோடேஸ்வர் பகுதியில் மனகரா ஆற்றின் கரைப் பகுதியில், விமானம் விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த, 19 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பயணிகளில், ஏழு பேர் பிரிட்டன் நாட்டையும், ஐந்து பேர் சீனாவையும், நான்கு பேர் நேபாளத் தையும் சேர்ந்தவர்கள். இவர்களை தவிர, விமானிகள் இருவர், விமான பணிப்பெண் ஆகியோரும் பலியாயினர்.

பலியான நான்கு நேபாளியர்களில் ஒருவர் ராணுவ வீரர். இவர் டிக்கெட் எடுக்காமல் விமானத்தில் பயணித்துள் ளார்.விமானம் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததும், அப்பகுதிக்கு, போலீஸ், ராணுவம் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் விரைந்து சென்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தொடரும் விமான விபத்துகள்...
 
2012 செப்., 28: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து, எவரெஸ்ட் சிகரம் செல்லும் வழியில் லுக்லா நகரை நோக்கி சென்ற விமானம் தீப்பிடித்து எரிந்ததில், பயணம் செய்த, 19 பேரும் பலி.
மே 14 : வடக்கு நேபாளத்தின் ஜோம்சோம் விமான நிலையத்தில், தரையிறங்க முயன்ற சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில், 14 பேர் பலி.
2011 செப்., 25: எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிப்பார்க்க சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில், 19 பேர் பலி.
2010 டிச., 15: சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், 22 பேர் பலி.
ஆக., 24: அக்னி ஏர் விமானம், எவரெஸ்ட் பகுதியை கடக்க முற்படும் போது பெய்த கன மழையால், விபத்துக்குள்ளானதில், 14 பேர் பலி.
2008 அக்., 8: வடக்கு நேபாளத்தின் லுக்லா மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளோடு சென்ற சிறிய ரக விமானம், மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில், 18 பேர் பலி.
2006 ஜூன் 21: ஜூம்லா ஏர்போர்ட்டில், சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டு எல்லையை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளானதில், 9 பேர் பலி.
2002 ஆக., 22: ஜெர்மனி சுற்றுலா பயணிகள் சென்ற சிறிய ரக விமானம், மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில், 18 பேர் பலி.

0 கருத்துகள்: