தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.9.12

இலங்கை யாத்திரிகர்கள் மீது தாக்குதல் முயற்சி? : தமிழகத்தில் தொடரும் பதற்றம்


தஞ்சாவார் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண் டி மாதா ஆலயத்தில் வழிபாட்டுக்கு வந்திருந்தஇல ங்கையர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களை, அங்கி ருந்து உடனடியாகவெளியேற்ற வேண்டுமென மதி முக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உட்பட பல் வேறு தமிழ் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட் டன.  இதையடுத்து உடனடியாக அவர்களை இலங் கைக்கு அனுப்பிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டிருந்தது.இந்நிலையில்
குறித்த யாத்திரிகர்கள் அவர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வீச்சு தாக்குதலாக நடைபெற்ற இச்சம்பவத்தில் 12 இலங்கையர்கள் காயமடைந்ததாகவும் மூன்று வாகனங்கள் சேதமடைந்ததாகவும் சில உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று இரவு விமானம் மூலம் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பிவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாக்குதல் சம்பந்தமாக மதிமுகவின் 31 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சிகளுக்காக வந்திருந்த சிறிலங்கா காற்பந்து வீரர்கள் இருவரை உடனடியாக மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்ப தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று உத்தரவு பிறப்பித்ததுடன், பயிற்சி அளிக்க அனுமதி அளித்த பொறுப்பு அதிகாரையும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இதற்கு, 'இலங்கை விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல' என திமுக தலைவர் கருணாநிதி ஆட்சேபணை தெரிவித்துள்ளார். இலங்கை விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதும், இந்திய வீரர்கள் அங்கு சென்று விளையாடுவதும் வழக்கமான ஒரு நிகழ்வு. எனவே விளையாட்டு வீரர்க்ளை திருப்பி அனுப்புவது என்பது சரியான முடிவல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் 21ம் திகதி மத்திய பிரதேசத்தின் சாஞ்சிக்கு மத நிகழ்வு ஒன்றுக்காக வருகை தரவுள்ள நிலையில் அதை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் தொடரும் இப்பதற்றமான நிலைமைகளை அடுத்து, இலங்கையர்கள் யாரும் தமிழ்நாட்டுக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தது.

இதேவேளை, இந்திய மத்திய அரசின் ஒத்துழைப்பின்றி தமிழகத்தில் இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது என இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தெ.இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள், யாத்திரீகர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது. இதே போன்று இலங்கை வரும் இந்தியர்கள் மீது நம்மவர்கள் தாக்குதல் நடத்தினால் அதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ அல்லது மத்திய அரசாங்கமோ பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமா?, இலங்கையுடன் மெய்யான உறவுகளை பேண வேண்டுமென இந்தியா கருதினால் இத்தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

0 கருத்துகள்: