சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில்30 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர். 300 பேருக்கும் அதிகமானோர் இருந்த தொழிற்சாலையில் நடந்துள்ள இந்த விபத்தில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.சிவகாசி அருகே முதலிப்பேட்டையிலுள்ளது ஓம் சிவ சக்தி பட்டாசு தொழிற்சாலை. இங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 30
பேர்பரிதாபமாக உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் தீவிபத்து நிகழ்ந்த வேளையில் சுமார் 300 க்கும் அதிகமானோர் இருந்ததால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

10 தீயணைப்பு வண்டிகள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினை அணைக்கப்போராடிக் கொண்டிருக்கின்றன. தொழிற்சாலை கட்டிடத்திலிருந்து பெருத்த ஒலியுடன் வெடி சப்தம் கேட்டதாக அருகிலுள்ளோர் கூறுகின்றனர். கட்டிடத்திலிருந்து பெரிய தீச்சுவாலையுடன் புகை வெளியாகிக்கொண்டிருப்பதால் தீயணைக்கும் முயற்சிகள் மந்தகதியிலேயே நடக்கிறது.
தீபாவளியினை முன்னிட்டு பட்டாசுகளின் தேவை அதிகமானதால் சிவகாசி தொழிற்சாலைகளில் பட்டாசு வேலைகள் மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக